Thavikiren Thavikiren Song Lyrics

Thavikiren Thavikiren Song Lyrics from Time Tamil Movie. Thavikiren Thavikiren Song Lyrics has written in Tamil by Pazhani Bharathi.

படத்தின் பெயர்:டைம்
வருடம்:1999
பாடலின் பெயர்:தவிக்கிறேன் தவிக்கிறேன்
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:பழனி பாரதி
பாடகர்கள்:ஹரிஹரன், பவதாரணி

பாடல் வரிகள்:

பெண்: தவிக்கிறேன் தவிக்கிறேன்
உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன்
உனது நினைவாலே
நான் அனுப்பும் பூ வாசம்

ஆண்: நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன்
உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன்
உனது நினைவாலே

ஆண்: வண்ணங்கள் தேவையில்லை
உன்னை தொட்டு படம் தீட்டுவேன்
அடடா அது நடந்தால்
உலகம் வியந்து புகழும்

பெண்: ஸ்வரம் ஏழு போதவில்லை
உன் பெயரை ஸ்வரம் ஆக்குவேன்
அடடா அது நடக்கும்
உலகம் வியந்து புகழும்

ஆண்: ஓடி வா ஓடி வா
இயங்கவில்லை இதயத்தின் ஒரு பாதி
பெண்: தேடி வா தேடி வா
இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி
ஆண்: காதலே காதலே
மேகத்தால் வானில் வீடு கட்டு

பெண்: தவிக்கிறேன் தவிக்கிறேன்
உனது கனவாலே

பெண்: முதன் முதலாய் பாா்க்கும் போது
என்னை என்ன செய்வாயோ நீ
நினைத்தால் அதை நினைத்தால்
மனதில் நடுக்கம் பிறக்கும்

ஆண்: குல தெய்வம் நோில் பாா்க்கும்
பக்தனை போல் நான் காணுவேன்
ஒரு நாள் அது நடக்கும்
திருநாள் என்னை அழைக்கும்

பெண்: மாற்றினாய் மாற்றினாய்
சிறகின்றி பறக்கின்ற பூவாக
ஆண்: மாறினேன் மாறினேன்
உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக
பெண்: காலமே காலமே
காலத்தால் அழியா வாழ்வு கொடு

ஆண்: தவிக்கிறேன் தவிக்கிறேன்
உனது கனவாலே
பெண்: துடிக்கிறேன் துடிக்கிறேன்
உனது நினைவாலே

ஆண்: ஓவியத்தை பாா்த்தாலும்
ஓவியத்தை பாா்த்தாலும் அன்பே
உன் கன்னங்கள் சிவக்கின்றதே

பெண்: தவிக்கிறேன் தவிக்கிறேன்
உனது கனவாலே
ஆண்: துடிக்கிறேன் துடிக்கிறேன்
உனது நினைவாலே