Thai Madiyil Song Lyrics in Tamil from Psycho Movie. Thai Madiyil Naan Thalaiyai Song Lyrics has penned in Tamil by Mysskin.
பாடலின் பெயர்: | தாய்மடியில் |
---|---|
படத்தின் பெயர்: | சைக்கோ |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | மிஸ்கின் |
பாடகர்: | கைலாஷ் ஹெர் |
பாடல் வரிகள்:
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
சோகம் தாங்கிபாரம் இறக்க
யாரும் இல்லையே
தாகம் தீர்க்க சுணையாய் இங்கு
கருணை இல்லையே
கோபம் வாழ்வில் நிழலாய்
ஓடி ஆடி அலையா
பாசம் நெஞ்சில் கனலாய்
ஓங்கி ஏங்கி எரிய
காற்றே என் காற்றே உன்
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
காயம் செய்த மனிதன்
இன்று இருளில் கரைகிறேன்
நியாயம் செய்த மனதை
நினைத்து ஒளியில் நனைகிறேன்
காலம் மீண்டும் மாற
மாயம் கையில் இல்லை
ஞாலம் மீண்டும் மாற
பாரம் நெஞ்சில் இல்லை
தாயே என் தாயே உன்
சேய் இங்கு கருவில் கலந்திடுவேன்
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே