Sri Ranga Ranga Nathanin Song Lyrics

Sri Ranga Ranga Nathanin Song Lyrics in Tamil from Mahanadhi Movie. Sri Ranga Ranga Nathanin Song Lyrics has penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:மகாநதி
வருடம்:1994
பாடலின் பெயர்:ஸ்ரீரங்க ரங்க நாதனின்
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம்,
உமா ரமணன், ஷோபனா

பாடல் வரிகள்

பெண்கள்: கங்கா சங்காச காவேரி
ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசாரி
நமஸ்தேஸ்து சுகாசரி

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி

பெண்: இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம்
மங்கை நீ சூடி

பெண்: இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம்
மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி

பெண்: கொள்ளிடம் நீர் மீது
நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று
மந்திரம் பாடும்

பெண்: செங்கனி மேலாடும்
மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி
சாமரம் வீசும்

பெண்: அந்நாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி

பெண்: இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம்
மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

பெண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி

ஆண்: கன்னடம் தாய் வீடு
என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு
தென்னகம் ஆகும்

ஆண்: கங்கையின் மேலான
காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட
முன் வினை தீர்க்கும்

ஆண்: நீர் வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன்
தேவலோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி

ஆண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி

ஆண்: இன்பம் பொங்கும்
தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம்
மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம் பாடடி

ஆண்: ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
இருவர்: ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம்
சந்ததம் சொல்லடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *