Samayapurathale Mariamma Song Lyrics

Samayapurathale Mariamma Song Lyrics in Tamil from Amman Songs. Samayapuram Mariamman’s Samayapurathale Mariamma Song Tamil Lyrics.

பாடல் வரிகள்

சமயபுரத்தாளே மாரியம்மா
அம்மா சங்கரியே
எங்கள் முன்னே வாருமம்மா

மல்லிகைச் சரம் தொடுத்து
மாலையிட்டோம்
அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து
பொங்கலும் வைத்தோம்

துள்ளியே எங்கள் முன்னே
வாருமம்மா
அம்மா தூயவளே
என் தாயே மாரியம்மா

சமயபுரத்தாளே மாரியம்மா
அம்மா சங்கரியே
எங்கள் முன்னே வாருமம்மா

பட்டு பீதாம்பரத்தில
தாவணியும்
உனக்கு பாவாடை சேலைகளும்
கொண்டு வந்தோம்

எட்டு திசைகளையும்
ஆள்பவளே
ஈஸ்வரியே என் தாயே
மாரியம்மா

சமயபுரத்தாளே மாரியம்மா
அம்மா சங்கரியே
எங்கள் முன்னே வாருமம்மா

கத்தி கதறுகிறோம்
கேட்கலையோ
தாயே கல்லேதான் உன் மனமும்
கரையலையோ

உலகமெல்லாம் ஆடுதம்மா
உன் சிரிப்பிலே
அம்மா உமையவளே
என் தாயே மாரியம்மா

சமயபுரத்தாளே மாரியம்மா
அம்மா சங்கரியே
எங்கள் முன்னே வாருமம்மா

காலிற் சலங்கை ஒலி
காதை துளைக்குதம்மா
பாவாடை தாவணியும்
தானாக ஆடுதம்மா

பூவாடை வீசுதம்மா
பூமகளே
உனக்கு பாமாலை
கொண்டு வந்தேன் பாரம்மா

சமயபுரத்தாளே மாரியம்மா
அம்மா சங்கரியே
எங்கள் முன்னே வாருமம்மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *