Sivarathiri Thookam Ethu Song Lyrics in Tamil from Michael Madana Kama Rajan. Sivarathiri Thookam Ethu Song Lyrics penned by Vaali.
படத்தின் பெயர்: | மைக்கில் மதன காம ராஜன் |
---|---|
வருடம்: | 1990 |
பாடலின் பெயர்: | சிவராத்திரி தூக்கம் ஏது |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | மனோ, KS சித்ரா |
பாடல் வரிகள்:
பெண்: சிவராத்திரி
தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ
பெண்: பனி ராத்திரி
ஓ பட்டு பாய் விரி
சுபராத்திரி
ஓ புது மாதிரி
பெண்: விடிய விடிய
சிவராத்திரி
தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி
ஆண்: வெப்பம் தீர வந்தடி
வேப்ப மர காத்து
வச்சிக்க உன் கச்சேரிய
உச்ச கதம் பாத்து
பெண்: தெப்பம்போல தத்தளிக்கும்
செம்பருத்தி நாத்து
அம்பலத்தில் ஆடுறப்போ
உன் பலத்த காட்டு
ஆண்: ராஜாமணி
மாய மோகினி
ரோஜா மலர் நீ
பெண்: தேமாங்கனி
தேவ ரூபினி
தேன் வாங்கலாம் நீ
ஆண்: சுக ராத்திரி ஓ ஹோ
புது மாதிரி விடிய விடிய
ஆண்: சிவராத்திரி
தூக்கம் ஏது ஹோ
முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ
ஆண்: பனி ராத்திரி ஓ ஹோ
பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ ஹோ
புது மாதிரி விடிய விடிய
பெண்: சிவராத்திரி
பெண்: வெட்டி வேரு வாசனைய
தொட்டு தொட்டு பாரு
கிட்ட வந்து கட்டிக்காம
விட்டு வச்ச தாரு
ஆண்: அர்த்த ஜாம நேரத்தில
பூஜைகளை ஏற்று
பக்தனுக்கு பக்கம் வந்து
சொர்க்கம் ஒன்று காட்டு
பெண்: நூலாடையை
போட்டு மூடினேன்
பாலாடையை தான்
ஆண்: ஆத்தாடியோ
தேஞ்சி போகுமா
பார்த்தால் என்ன நான்
பெண்: சுப ராத்திரி ஓ
புது மாதிரி விடிய விடிய
ஆண்: சிவராத்திரி
தூக்கம் ஏது ஹாய்
முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ
பெண்: பனி ராத்திரி
ஓ பட்டு பாய் விரி
சுபராத்திரி
ஓ புது மாதிரி
விடிய விடிய
ஆண்: சிவராத்திரி
தூக்கம் ஏது ஹாய்
பெண்: முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ
ஆண்: சிவராத்திரி