Raila Raila Song Lyrics in Tamil

Raila Raila Song Lyrics in Tamil Font from Nadodigal 2 Movie. Raila Raila Song Lyrics has penned in Tamil by Yugabharathi.

பாடலின் பெயர்:ரயிலா ரயிலா
படத்தின் பெயர்:நாடோடிகள் 2
வருடம்:2020
இசையமைப்பாளர்:ஸ்டின் பிரபாகரன்
பாடலாசிரியர்:யுகபாரதி
பாடகர்:அச்சு ராஜாமணி
பாடல் வரிகள்:

ஆண்: ரயிலா ரயிலா ஓடும் ரயிலா
மனசையும் கடத்துறியே
கயிறா கயிறா நைலான் கயிறா
வயசையும் இழுக்கிறியே

ஆண்: கண்ணால காவடியா
குழு: அம்மாடி
ஆண்: என்னையும் நீ தூக்குறியே
குழு: ஐயோடி
ஆண்: உன்னால என் நாடியில எறும்பூறுதடி
இனி நான்தான் ஒன் ஜோடி

ஆண்: ஆகாய ஊஞ்சல் போலே உன் பார்வை
அழகாக ஆள தூக்கி மேல வீசுதே

ஆண்: ஒளி ஏத்தும் பேச்சுல
உசுரோரம் பேய் மழை
கொட சாஞ்சு நானும் போக
கோலம் போடுதே

ஆண்: காணாத சாமிகள
குழு: நான்தான்
ஆண்: பார்த்தேன் உன் சாயலில
குழு: ஆமா
ஆண்: உன் கை விரல் மோதயில
குயில் கூவுது மூலையில

ஆண்: பாஞ்சாலி சேலை போலே என் காதல்
உன்ன சேர ஏங்கி ஏங்கி நீளமாகுதே

ஆண்: ஒழுங்காக கோட்டுல
நடை போட்ட காலுமே
உன்ன பார்க்கும் ஆசையால
ஆட்டம் போடுதே

ஆண்: காதோரம் செய்திகள
குழு: ஆஹா
ஆண்: நீ பேசும் வேலையில
குழு: ஓஹோ
ஆண்: கண் தூங்கவும் கூடலையே
நிதம் கூட்டுற காதலையே

ஆண்: ரயிலா ரயிலா ஓடும் ரயிலா
மனசையும் கடத்துறியே
கயிறா கயிறா நைலான் கயிறா
வயசையும் இழுக்கிறியே

ஆண்: கண்ணால காவடியா
குழு: காவடியா
ஆண்: என்னையும் நீ தூக்குறியே
குழு: தூக்குறியே
ஆண்: உன்னால என் நாடியில எறும்பூறுதடி
இனி நான்தான் ஒன் ஜோடி

குழு: ஹேய் திண்ணக்கு தின்னா
தக்கு திண்ணக்கு தின்னா
ஹேய் திண்ணக்கு தின்னா
தக்கு திண்ணக்கு தின்னா ஹேய்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *