Pathu Ooraiyum Song Lyrics in Tamil

Pathu Ooraiyum Song Lyrics in Tamil from Padai Veetu Amman Movie. Pathu Ooraiyum Song Lyrics has penned in Tamil by Kalidasan.

பாடல்:பத்து ஊரையும்
படம்:படைவீட்டு அம்மன்
வருடம்:2002
இசை:SA ராஜ்குமார்
வரிகள்:காளிதாசன்
பாடகர்:KS சித்ரா

Pathu Ooraiyum Lyrics in Tamil

பத்து ஊரையும்
பாக்குறா பாக்குறா
படைவீட்டம்மா
நம்ம காக்குறா காக்குறா

பத்து ஊரையும்
பாக்குறா பாக்குறா
படைவீட்டம்மா
நம்ம காக்குறா காக்குறா

பூமி பொறக்கும் முன்னே
பூத்து வந்தவளாம்
ஆரணி எல்லையிலே
கோயில் கொண்டவளாம்

அழைத்த போது வருபவளாம்
அள்ளிக்கொடுக்கும் திருமகளாம்
பசிக்கும் உயிரின் குறையை தீர்த்து
படி அளக்கும் பெரியவளாம்

நெனச்சதை கொடுக்கும் தாயம்மா
அவள் கோயிலிலே
தினம் தினம் திருவிழாவாமம்மா

பத்து ஊரையும்
பாக்குறா பாக்குறா
படைவீட்டம்மா
நம்ம காக்குறா காக்குறா

பூமி பொறக்கும் முன்னே
பூத்து வந்தவளாம்
ஆரணி எல்லையிலே
கோயில் கொண்டவளாம்

படை எடு படை எடு
எங்க படைவீட்டு அம்மா
எதிரிகள் பொடிபட
வந்து விளையாடு அம்மா

ஊரு செழிக்கவே
மாரி வடிவிலே ஓடி வருவாளாம்
ஆடி பொறந்ததும்
கூழு குடிக்கவே தேடி வருவாளாம்

பச்சரிசி மாவு கூட
பானகமும் ஊத்தி வச்சா
உச்சி கொட்டி ஒன்னொன்னாக
தின்னு ரசிப்பாளாம்

பத்தினிங்க வேண்டிக்கிட்டு
கட்டிவரும் வேப்பிலையில்
முத்துமாரி சக்திமாறி
கூட இருப்பாளாம்

பத்து ஊரையும்
பாக்குறா பாக்குறா
படைவீட்டம்மா
நம்ம காக்குறா காக்குறா

பூமி பொறக்கும் முன்னே
பூத்து வந்தவளாம்
ஆரணி எல்லையிலே
கோயில் கொண்டவளாம்

அவ வில்லெடுத்து அம்பெடுத்து
வேட்டையாடுவா
வரும் தொல்லை எல்லாம்
தீர்த்து வச்சு நாட்டை ஆளுவா

நல்ல பக்தர்களை பாதுகாக்க
சூலம் ஏந்துவா
அவ கெட்டவரை திட்டமிட்டு
உயிரை வாங்குவா

படைகள் சூழ உலகை ஆளா
பவனி வருகிற படைவீட்டம்மா
கரகம் எடுத்தோம்
உனையே துதித்தோம்
நாங்கள் வாழ வழி காட்டம்மா

அடி சாமுண்டிகா ரேணுகா
அந்த பரசுராமன் அம்மாவே

பத்து ஊரையும்
பாக்குறா பாக்குறா
படைவீட்டம்மா
நம்ம காக்குறா காக்குறா

பூமி பொறக்கும் முன்னே
பூத்து வந்தவளாம்
ஆரணி எல்லையிலே
கோயில் கொண்டவளாம்

அழைத்த போது வருபவளாம்
அள்ளிக்கொடுக்கும் திருமகளாம்
பசிக்கும் உயிரின் குறையை தீர்த்து
படி அளக்கும் பெரியவளாம்

நெனச்சதை கொடுக்கும் தாயம்மா
அவள் கோயிலிலே
தினம் தினம் திருவிழாவாமம்மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *