Pandarathi Puranam Song Lyrics

Pandarathi Puranam Song Lyrics in Tamil from Karnan Movie. Pandarathi Puranam Song Lyrics penned in Tamil by Yugabharathi.

படத்தின் பெயர்:கர்ணன்
வருடம்:2021
பாடலின் பெயர்:பண்டாரத்தி புராணம்
இசையமைப்பாளர்:சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:யுகபாரதி
பாடகர்கள்:தேவா, ரீத்தா

பாடல் வரிகள்:

ஆண்: என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

ஆண்: என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

ஆண்: என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

ஆண்: என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

ஆண்: அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

ஆண்: என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலக்கடிச்ச சக்கலத்தி

ஆண்: என் ஆளு பண்டாரத்தி

ஆண்: வள்ளநாட்டு மலையோரம்
வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்

ஆண்: கக்குளத்து பக்கத்துல
காள சாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

ஆண்: என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி ஏமனோட
வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யானை மேல ஏத்துனா

ஆண்: அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

பெண்: ஏய்…
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு
ஏய் போடு ஏய் போடு

பெண்: ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் போடு…

பெண்: ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா…

ஆண்: கருப்பந்தொர மண்ணெடுத்து
காரவீடு கட்டிக்கிட்டோம்
நாயுக்குட்டி நாலேடுத்து
குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்

ஆண்: பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட
வாசலிலே காத்திருந்தேன்

ஆண்: என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி உடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சூ
காலரானு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே

ஆண்: என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்.. ரவு…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *