Kandaa Vara Sollunga Song Lyrics in Tamil

Kandaa Vara Sollunga Song Lyrics in Tamil from Karnan Movie. Kandaa Vara Sollunga Song Lyrics has penned in Tamil by Mari Selvaraj.

படத்தின் பெயர்:கர்ணன்
வருடம்:2021
பாடலின் பெயர்:கண்டா வரச்சொல்லுங்க
இசையமைப்பாளர்:சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:மாரி செல்வராஜ்
பாடகர்கள்:கிடக்குழி மாரியம்மாள்,
சந்தோஷ் நாராயணன்

பாடல் வரிகள்:

பெண்: சூரியன பெக்கவில்லை
சந்திரனும் சாட்சி இல்லை

பெண்: சூரியன பெக்கவில்லை
சந்திரனும் சாட்சி இல்லை
பாதகத்தி பெத்த பிள்ளை
பஞ்சம் திண்ணு வளந்த பிள்ளை

பெண்: கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

ஆண்: கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

பெண்: அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கெளை

பெண்: அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கெளை
ஒத்தக்கிளி நின்னாக்கூட
கத்தும்பாரு அவன் பேர

பெண்: கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

ஆண்: கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

பெண்: ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா

பெண்: ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஒத்த பூடம்ங்கூட இல்லயப்பா
எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா

பெண்: கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

ஆண்: கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

பெண்: கவசத்தையும் கண்டதில்ல
எந்த குண்டலமும் கூடயில்லை
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை

பெண்: வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டப்போட்ட எவனும் இல்லை

பெண்: கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

ஆண்: கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *