Nillu Nillu Nillu Nillu Song Lyrics in Tamil

Nillu Nillu Nillu Nillu Song Lyrics in Tamil from Kanchana. Nillu Nillu Nillu Nillu Song Lyrics penned by Raghava Lawrence.

படத்தின் பெயர்:காஞ்சனா
வருடம்:2011
பாடலின் பெயர்:நில்லு நில்லு
இசையமைப்பாளர்:S தமன்
பாடலாசிரியர்:ராகவா லாரன்ஸ்
பாடகர்கள்:திப்பு

பாடல் வரிகள்:

ஓயாதே ஓயாதே ஓயாதே
ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லு நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு

ஓயாதே
எத்தனப்பேர் வந்தாங்கடா
எத்தனப்பேர் போனாங்கடா
சாதிச்சவர் மட்டும் இங்க
செலையா நின்னாங்கடா

கொண்டு வந்தது எதுவுமில்ல
கொண்டு போவது எதுவுமில்ல
ஒரு கை பார்த்திடலாம்
வாழ்க்கையை ஜெயிச்சிடலாம்

கொல்லுடா கொல்லுடா கொல்லுடா
உன் பயத்த நீயும் கொல்லுடா
வெல்லுடா வெல்லுடா வெல்லுடா
உன் விதிய நீயும் வெல்லுடா

ஓடுடா ஓடுடா ஓடுடா
நீயும் காலில்லாம ஓடுடா
பாடும்டா பாடும்டா பாடும்டா
உன் புகழ உலகம் பாடும்டா

ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லு நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு
ஓயாதே ஓயாதே

கஷ்டம் நஷ்டம் அது வந்து போகும்
துயரம் வந்து தாக்கும்
எது வந்தாலும் துனிஞ்சி நில்லு
அது பயந்து ஓடும்

இன்பம் மட்டும் அட வாழ்க்கையின்னா
வாழ்க்கை போரு ஆகும்
துன்பம் தான்டி அந்த இன்பம் வந்தா
வாழ்க்கை ஜோரு ஆகும்

ஹே வலிய தள்ளி வைய்யி
லட்சியத்த உள்ள வைய்யி
ஒன்னப் பார்த்துக் கத்துக்கனும்
தூங்கறவன் முழிச்சுகனும்

ஓடும்டா ஓடும்டா ஓடும்டா
காலம் சீக்கிரம் ஓடும்டா
கூடும்டா கூடும்டா கூடும்டா
உன் வயசு சீக்கிரம் கூடும்டா

தேடுடா தேடுடா தேடுடா
உன் லட்சிய பாதைய தேடுடா
ஏத்துடா ஏத்துடா ஏத்துடா
உன் கொடிய உலகில் ஏத்துடா

கையி காலு அது நல்லாருந்தும்
தூங்குற மூஞ்சப் பாரு
ஊனம் மறந்து துள்ளி குதிக்கிற
இந்த பையனப் பாரு

கம்ப்யூட்டர் போல மூளை கொடுத்தும்
சாமிய திட்றான் பாரு
காலில்லாம போனால் கூட
ஆடும் அழகப் பாரு

நம்பிக்கைய ஏத்திக்கடா
ரத்தத்துல சேர்த்துக்கடா
உண்மையா உழைச்சி நீயும்
உலகத்த மாத்திக்கடா

வாங்கடா வாங்கடா வாங்கடா போடு
இனி வருங்காலம் நாமடா
தேடும்டா தேடும்டா தேடும்டா
இந்த உலகம் உன்ன தேடும்டா

பாடம்டா பாடம்டா பாடம்டா
உன் வாழ்க்கையே ஒரு பாடம்டா
சேரும்டா சேரும்டா சேரும்டா
உனக்கும் கூட்டம் சேரும்டா

ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லு நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு
ஓயாதே ஓயாதே ஓயாதே