Sooriya Paravaigale Song Lyrics in Tamil from Vaathi Movie. Sooriya Paravaigale Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
பாடல்: | சூரிய பறவைகளே |
---|---|
படம்: | வாத்தி |
வருடம்: | 2023 |
இசை: | GV பிரகாஷ் குமார் |
வரிகள்: | யுகபாரதி |
பாடகர்: | திப்பு, ரவி G |
Sooriya Paravaigale Lyrics in Tamil
சூரிய பறவைகளே
சுடர் ஏந்திய சிறகுகளே
இனி வானமும் பூமியும்
நம் வசமாகிட
ஓடிடும் கவலைகளே
போயின இரவுகளே
புதிதாயின பொழுதுகளே
வரலாறுகள் மாறிடும்
நாளையும் பார்த்திட
பூத்திடும் கனவுகளே
அறிவுதான் உயரமே எழுந்து வா
நம் புரட்சியிலே இமயமுமே
இனி படிக்கட்டாய் ஆகிடுமே
பிறப்பது ஒரு முறை
இறப்பது ஒரு முறை
துணிந்தே செல்
துணிந்தே செல்
பெரியது சிறியதை
அடக்கிட முயல்வது
சரியா சொல்
சரியா சொல்
அரிதரும் நெருப்பினில்
உலகையும் கொளுத்திட
நிமிர்ந்தே நில்
நிமிர்ந்தே நில்
விழவா பிறந்தோம்
விதையாய் எழுவோம்
உள்மனதிலே ஒளி இருந்தால்
விளக்கு வரும் தொடர்ந்தே
கொடியேற்றிட வா
ஏறு முன்னேறு
நீ அடங்காத காட்டாறு
போனது ஏன் கண்ணீரு
Vaathi Movie Song Lyrics
Sooriya Paravaigale
Sudar Yenthiya Siragugale
Ini Vaanamum Bhoomiyum
Nam Vasamaagida
Odidum Kavalaigale
Poyina Iravigale
Puthithaayina Pozhuthugale
Varalaarugal Maaridum
Naalaiyum Paarthida
Poothidum Kanavugale
Arivu Thaan Uyarame
Ezhunthu Vaa
Nam Puratchiyile Imayamume
Ini Padikattaai Aagidume
Pirappathu Oru Murai
Irappathu Oru Murai
Thuninthe Sel
Thuninthe Sel
Periyathu Siriyathai
Adakkida Muyalvathu
Sariyaa Sol
Sariyaa Sol
Aritharum Neruppinil
Ulagaiyum Koluthida
Nimirnthe Nil
Nimirnthe Nil
Vizhava Piranthom
Vithaiyaai Ezhuvom
Ulmanathinile Oli Irunthaal
Vilakku Varum Thodarnthe
Kodiyetrida Vaa
Yeru Munneru
Nee Adangaatha Kaattaru
Ponathu Aen Kanneeru
Short Info
வாத்தி என்பது 2023 ஆம் ஆண்டு வெங்கி அட்லூரி எழுதி இயக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படமாகும். இது தெலுங்கில் SIR என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைத்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசையமைக்க யுகபாரதி, தனுஷ் இருவரும் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளனர். மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia.