Nimirnthu Nil Thuninthu Sel Song Lyrics in Tamil from Saroja. Nimirnthu Nil Thuninthu Sel Song Lyrics Penned by Gangai Amaran.
படத்தின் பெயர்: | சரோஜா |
---|---|
வருடம்: | 2008 |
பாடலின் பெயர்: | நிமிர்ந்து நில் துணிந்து செல் |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | கங்கை அமரன் |
பாடகர்கள்: | ஷங்கர் மகாதேவன் |
பாடல் வரிகள்:
நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினைப்பு தான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு
போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்று கரையேறி முன்னேறு
நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினைப்பு தான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு
நேற்றும் இல்லை நாளை இல்லை
இன்றுமட்டும் என்றும் உண்டு
மாற்றம் எல்லாம் மாற்றம் இல்லை
மாற வேண்டும் நீயும் இன்று
ஓடி ஓடி கால்கள் ஓய்ந்து
தேடி தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ
வீரன் என்று பிறப்பதில்லை
வீரனாக ஆவதுண்டு
கோழை என்று எவனும் இல்லை
கோபம் கொண்டால் கோழை இல்லை
இங்கு உன் வாழ்க்கை உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு
இப்போது தான் சோதனை
நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினைப்பு தான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு
விழுவதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம்போல
அழுவதென்றால் அன்புகாக
அனைத்தும் இங்கே நட்புக்காக
ஓய்ந்து போனால் சாய்ந்து போனால்
உந்தன் வாழ்வில் ஏதுமில்லை
ஓய்ந்திடாது மோதிப்பாரு முயன்று ஏறு
முடிவு உந்தன் படைகள் வெல்லும்
வந்து போவார் கோடி பேர்கள்
வாழ்ந்தவர் யார் உலகம் சொல்லும்
நீயும் முன்னாடியே ஜிரோ
இப்போதுதான் ஹீரோ
நில்லாதே எப்போதும்
உன்முன்னே தடைகள் இல்லை
நிமிர்ந்து நில் துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினைப்பு தான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு
சிறுகுறிப்பு:
சரோஜா என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை திரில்லர் படம். இதனை வெங்கட் பிரபு எழுதி இயக்க டி.சிவா தயாரித்துள்ளார். இதில் சிவா, வைபவ், பிரேம்ஜி, எஸ்.பி.சரண், வேகா தமோடியா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சம்பத் ராஜ், காஜல் அகர்வால், நிகிதா துக்ரால் மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தினை சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5, 2008 அன்று வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் அறிய