Valkai Oru Porkalam Song Lyrics in Tamil from Aadukalam Movie. Valkai Oru Porkalam Song Lyrics penned in Tamil by Yugabharathi.
படத்தின் பெயர்: | ஆடுகளம் |
---|---|
வருடம்: | 2011 |
பாடலின் பெயர்: | வாழ்க்கை ஒரு போர்க்களம் |
இசையமைப்பாளர்: | GV பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்கள்: | யோகி B |
பாடல் வரிகள்:
வாழ்க்கை ஒரு போர்க்களம்
வேட்டையாடி பார்க்கணும்
போராடி வெல்லடா
போட்டி போட்டு கொள்ளடா
அடக்குதலை முடக்குதலை வெறுப்போம்
குருதி வலையில் பூரிப்போம்
பட்டாக் கத்தி பாய்த்திடுங்கள்
போ போ போ ரணகள நொடிகள்
எதிலுமே தோல்வி கூடாதடா
எமனையும் வெற்றி நீ கொள்ளடா
சாதனயிலே வேதனைகள் முடியும்
வரும் தலைமுறை என் பெயர் ஆண்டுவிடும்
வெல்வோமே வீழாமல்
வெல்வோமே வீழாமல்
போராடிவா இது ஆடுகளம் வா
கூண்டோடு கருவறுப்பேன்
போரின் முடிவில் கூத்தாடி
வலி ருசிப்பேன் பகை முட்றையில்
ஏன் எதிரினில் எதிரிகள் பொடிபடவே
இனி ஏதுமில்லை வழிமுறை அழித்திடவே
என் வீரம் உன்னை வேரறுத்து
கொள்ளி வைக்குமே தலைகள் சிதறும்
இது பகைவனை அறுத்திடும் அறுவடை
சினத்தால் செருக்கை துடை
திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே
பறந்தோடிடும் ஆட்டமே
அது சரித்திரம் படைத்திடும் கரும்படை
எழுந்தால் நொறுங்கும் படை
உயிர் விட்டும் நாம் காப்போம் மானமே
கைக்கூடிடும் காலமே
ஆடுகளம் கைக்கூடிடும் காலமே
ஆடுகளம் கைக்கூடிடும் காலமே
ஆடுகளம் கைக்கூடிடும் காலமே
ஆடுகளம் கைக்கூடிடும் காலமே
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
தாயவள் முகம் பெருமை
அடைந்திடும் மனதில்
புதிய ஒளி பரவும்
கவலை பறந்திடுமே
வென்றேன் இப்போதே
விலகிடு நீ இனிமேல்
எண்ணத் தொடாதே
ஒரு கையில் கறி சோறு
மறுகையில் தரமான பீரு
கரை ஓரம் தனி வீடு
கதைப் பேசுமே என் ஜோடியோடு
நான் ஆணையிட மாறிடுமே அடடா
நடைப்பாதையில் மலர்த்தூவி விடடா
இணை யார் எனப் புகழ் பாடிடடா
ஹாஹஹா கைக்கொள்ளாது காசடா
வரலாற்றில் வைத்திடுவோம் தடமே
தயங்காமல் எதையும் தருவோம் நாமே
அவருடன் என் காதலைப் பாரடா
என்னை நோக்கிப் பெண்
சொர்க்கம் இது மோதுமடா
மோதுமடா மோதுமடா
போராடினால் நாம் வெல்லலாம்
வான் வீதியில் கால் வைக்கலாம்
பூலோகமே பேர் சொல்லலாம்
சாகாமலே நாம் வாழலாம்
சிறுகுறிப்பு:
ஆடுகளம் ஆனது 2011-ம் ஆண்டு வெளியான சண்டை சார்ந்த நாடக திரைப்படம் ஆகும். இதில் தனுஷ், டாப்ஸி பன்னு, நரேன், கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதற்கு GV பிரகாஷ் குமார் இசையமைக்க யுகபாரதி, சினேகன், ஏகதேசி முதலியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். மேலும் அறிய