Vazhkai Pogum Dhooram Song Lyrics

Yaanji or Vazhkai Pogum Dhooram Song Lyrics in Tamil from Vikram Vedha. Vazhkai Pogum Dhooram Song Lyrics penned by Mohan Rajan

படத்தின் பெயர்:விக்ரம் வேதா
வருடம்:2017
பாடலின் பெயர்:யாஞ்சி
இசையமைப்பாளர்:சாம் C S
பாடலாசிரியர்:மோகன் ராஜன்
பாடகர்கள்:அனிருத் ரவிச்சந்தர்,
சக்திஸ்ரீ கோபாலன்

பாடல் வரிகள்:

ஆண்: யாஞ்சி யாஞ்சி
என் நெஞ்சில் வந்து வந்து நிக்குற
ஏன் ஏன் ஏன்

ஆண்: என்ன சாஞ்சி சாஞ்சி
நீ பார்த்து உன்ன சிக்க வைக்குற
ஏன் ஏன் ஏன்

பெண்: கனவினில் முளைக்கிறாய்
இமை அணைக்கையில் நான்
வினாவென வளைகிறேன்
உன்னை நினைக்கையில்

ஆண்: ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே
ஓ ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே

ஆண்: ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே
ஓ ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே

ஆண்: யாஞ்சி ஏன்

பெண்: மென்மையாய் மெல்ல நகரும்
எந்தன் நாட்குறிப்பில்
வன்மயாய் நீ வந்து சேரும்
மாயம் என்ன

பெண்: என்னவோ செய்கிறாய்
நீ என் ஆயுள் எல்லைகள்
போல் ஆகிறாய்

ஆண்: ஓ ஹோ
ஓ காந்தமாய் என்னை ஈர்க்கும்
உந்தன் அன்பு இன்று
சாந்தமாய் என்னை கட்டி போடும்
ஜாலம் என்ன
கேட்கிறேன் கூறடி பெண்மையே

பெண்: வாழ்க்கை போகும் தூரம்
நீயும் நானும் போக வேணும்
எந்தன் நெஞ்சில் கோடி
ஆசை தோன்றுது

ஆண்: நீ எந்தன் பாதி என்றும்
நானும் உந்தன் மீதி என்றும்
காதல் காதுக்குள்ள வந்து ஓதுது

ஆண்: ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே
ஓ ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே

ஆண்: ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே
ஓ ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே

ஆண்: யாஞ்சி ஏன்

சிறுகுறிப்பு:

விக்ரம் வேதா என்பது 2017-ம் ஆண்டு தமிழில் வெளியான Neo-Noir சண்டை படமாகும். இதனை புஷ்கர் காயத்திரி இயக்கியுள்ளார். இதில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் பாடல் வரிகளை விக்னேஷ் சிவன், மோகன் ராஜன், சாம்
CS, முத்தமிழ் ஆகியோர் எழுதியுள்ளனர். இதற்கு சாம் CS இசையமைத்துள்ளார். மேலும் அறிய