Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Nee Partha Vizhigal Song Lyrics from 3 (Three) Tamil Movie. Nijamadi Penne Song Lyrics. Nee Partha Vizhigal Song Lyrics penned by Dhanush.

படத்தின் பெயர்3
வருடம்2012
பாடலின் பெயர்நீ பாா்த்த விழிகள்
இசையமைப்பாளர்அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்தனுஷ்
பாடகர்கள்விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மோகன்

பாடல் வரிகள்:

ஆண்: நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

பெண்: இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

ஆண்: நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

ஆண்: நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

ஆண்: நிழல் தரும் இவள் பாா்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிா் நீதான் என்றால்
உடனே வருவாய் உடல் சாகும் முன்னாள்

பெண்: அனலின்றி குளிா் வீசும்
இது எந்தன் சிறை வாசம்

ஆண்: இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

ஆண்: நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

பெண்: நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

ஆண்: இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா ஓஹோ…

சிறுகுறிப்பு:

3 என்பது நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவால் 2012 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி காதல் உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இவர்களுடன் பிரபு, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு, பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் 30 மார்ச் 2012 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.

இந்த படம் மூலம் தனுஷ் சிறந்த நடிகருக்கானமற்றும் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதையும், அனிருத் ரவிச்சந்தர் சிறந்த இசை இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றனர். இதன்மூலம் தனுஷ் 2-வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகர், சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஆண் பின்னணி பாடகர் ஆகிய மூன்று விருதுகளை வென்றார். மேலும் அறிய


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.