Idhazhin Oru Oram Song Lyrics in Tamil

Idhazhin Oru Oram Song Lyrics from 3 (Three) Tamil Movie. Idhazhin or Idhalin Oru Oram Song Lyrics penned in Tamil by Aishwarya Dhanush.

படத்தின் பெயர்3
வருடம்2012
பாடலின் பெயர்இதழின் ஒரு ஓரம்
இசையமைப்பாளர்அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்ஐஸ்வர்யா தனுஷ்
பாடகர்கள்அஜீஷ் அசோக், அனிருத் ரவிச்சந்தர்

பாடல் வரிகள்:

இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு வில்
மேக் சர் யூ நெவெர் பீல் கோ

ஓ எல்லாம் மறந்து உன் பின்னால் வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதையாய் வரைந்தேன்

ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய் வைத்தாய்

ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு வில்
மேக் சர் யூ நெவெர் பீல் கோ

ஓ பெண்ணே…
சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
ஓ பெண்ணே…
என் காதல் என்றும் ட்ரு வில்
மேக் சர் யூ நெவெர் பீல் கோ
ஓ பெண்ணே…

சிறுகுறிப்பு:

3 என்பது நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவால் 2012 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி காதல் உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இவர்களுடன் பிரபு, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு, பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் 30 மார்ச் 2012 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.

இந்த படம் மூலம் தனுஷ் சிறந்த நடிகருக்கானமற்றும் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதையும், அனிருத் ரவிச்சந்தர் சிறந்த இசை இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றனர். இதன்மூலம் தனுஷ் 2-வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகர், சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஆண் பின்னணி பாடகர் ஆகிய மூன்று விருதுகளை வென்றார். மேலும் அறிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *