Megathil Ondrai Nindrom Song Lyrics

Megathil Ondrai Nindrom Song Lyrics in Tamil from Kadhal Sadugudu Movie. Megathil Ondrai Nindrom Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:காதல் சடுகுடு
வருடம்:2003
பாடலின் பெயர்:மேகத்தில் ஒன்றாய்
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஹரிஹரண், சுஜாதா

பாடல் வரிகள்

ஆண்: மேகத்தில் ஒன்றாய்
நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி
போகின்றோம் அன்பே

ஆண்: மேகத்தில் ஒன்றாய்
நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி
போகின்றோம் அன்பே

ஆண்: பிரிவென்பதால்
நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது
நீருக்கு மரணம் இல்லை

ஆண்: மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி
வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒருதுளி ஆகி
முத்தாய் மாறிடுவோம்

ஆண்: மேகத்தில் ஒன்றாய்
நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி
போகின்றோம் அன்பே

பெண்: கண்ணை கவ்வும்
உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும்
உன் பார்வையை காதலித்தேன்

பெண்: ஆசை கொண்டு
உன் ஆண்மையை காதலித்தேன்
மீசை கொண்டு
உன் மென்மையை காதலித்தேன்

ஆண்: நிலா விழும்
உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும்
உன் நிழலையும் காதலித்தேன்

ஆண்: நெற்றி தொடும்
உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும்
உன் உடைகளை காதலித்தேன்

பெண்: கல்லா சிலநாள் தெரிவோம்
அதனால் உறவா செத்துவிடும்
கடல் நீர் கொஞ்சம் மேகமானால்
கடலா வற்றிவிடும்

ஆண்: வெளியூர் போகும் காற்றும்
ஒருநாள் வீட்டுக்கு திரும்பி வரும்
பிரிதல் என்பது இலையுதிர் காலம்
நிச்சியம் வசந்தம் வரும்

ஆண்: மேகத்தில் ஒன்றாய்
நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி
போகின்றோம் அன்பே

பெண்: அன்பே அன்பே
உன்னை எங்கனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால்
என் இரவுகள் இறங்கிருப்பேன்

பெண்: உன்னை எண்ணி
என் உயிர்கலம் உடைந்திருப்பேன்
கண்ணால் கண்டால்
நான் இருமுறை உயிர்தரிப்பேன்

ஆண்: அன்பே அன்பே
உன்னை எங்கனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம்
உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்

ஆண்: பெண்ணே பெண்ணே
நம் பிரிவினில் துணை இருப்பேன்
கண்ணே கண்ணே
என் கண்களை அனுப்பி வைப்பேன்

பெண்: இத்தனை பிரிவு தகுமா என்று
இயற்கையை கண்டிக்கிறேன்
ஏன் தான் அவனை கண்டாய் என்று
கண்களை தண்டிக்கிறேன்

ஆண்: பிரியும் போதே பிரிவும் வளரும்
பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்ட சாலை
மீண்டும் சந்திப்போம்

ஆண்: மேகத்தில் ஒன்றாய்
நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி
போகின்றோம் அன்பே

பெண்: பிரிவென்பதால்
நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது
நீருக்கு மரணம் இல்லை

ஆண்: மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி
வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒருதுளி ஆகி
முத்தாய் மாறிடுவோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *