LR Eswari’s Mahamayi Samayapura Thaye Song Lyrics in Tamil. Mahamayi Samayapura Thaye Song Lyrics has penned in Tamil by Tamil Nambi.
படத்தின் பெயர்: | அம்மன் பாடல்கள் |
---|---|
வருடம்: | – |
பாடலின் பெயர்: | மகமாயி சமயபுரத்தாயே |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | தமிழ் நம்பி |
பாடகர்கள்: | LR ஈஸ்வரி |
பாடல் வரிகள்:
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நியே
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நியே
கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நியே
கண்கொடுக்கும் கண்ணபுர தேவி
அருள் தருவாள் இமயமலைச் செல்வி
கண்கொடுக்கும் கண்ணபுர தேவி
அருள் தருவாள் இமயமலைச் செல்வி
மூவிலை வேல் கைகொண்ட காளி
பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நியே
வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு
வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு
திருநீறே அம்மா உன் மருந்து
அதை அணிந்தாலே நோய் ஓடும் பறந்து
பெற்றவளே நீ அறிவாய் என்னை
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை
பெற்றவளே நீ அறிவாய் என்னை
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை
கற்றகலை சிறு துளியே எனக்கு
அதை கடலாக்கி வைத்த புகழ் உனக்கு
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நியே
கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நியே