Maranthaye Maranthaye Song Lyrics in Tamil from Teddy Movie. Maranthaye Maranthaye Song Lyrics are penned in Tamil by Madhan Karky.
பாடலின் பெயர்: | |
---|---|
படத்தின் பெயர்: | டெடி |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | டி.இமான் |
பாடலாசிரியர்: | மதன் கார்க்கி |
பாடகர்: | பிரதீப் குமார், ஜொனிதா காந்தி |
பாடல் வரிகள்:
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்
நினைவுகள் யாவும்
நீங்கி போனால் நான் யார்
மறதியா அவதியா சகதியா
நிகழ்ந்தவை எல்லாம்
பொய்யாய் ஆனால் நீ யார்
ஜனனமா சலனமா மரணமா
தனியாய் நான் வாழ்ந்தேனே
வானாய் நீ ஆனாய்
உனில் ஏற பார்த்தேனே
காணமல் போனாய்
யாரடி யாரடி நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர் காரணம் கூறடி
யாரடி யாரடி பாவி நீ யாரடி
ஓர் துளி ஞாபகம் ஊறுதா பாரடி
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்
முகிலுமில்லை புயலுமில்லை மழைவருமா
இதயத்திலே இனம் புரியா கலவரமா
விதியுமில்லை உரமும்மில்லை மரம் வருமா
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா
இதுவரை அறியா ஒருவனை விரும்பி
இதயம் இதயம் துடி துடித்திடுமா
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு
பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா
ஜென்மம் உண்மை இல்லை
உன் வேர் என்ன
காதல் கொண்டேன் உன்மேல்
உன் பேர் என்ன
அணுவெல்லாம் அணுவெல்லாம்
நினைவென நிறைந்தாய்
மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
நிறைந்தாயே நிறைந்தாயே
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்
தனிமையும் நானும்
மீண்டும் ஒன்றாய் ஆனோம்
மறுபடி சுருங்கிடும் உலகிலே
சுரங்கத்தை போலே
என்னுள் போக போக
பெருகிடும் பெருகிடும் நினைவிலே
உன்னை காண உலகத்தில்
எதுவும் மெய்யில்லை
உலகெல்லாம் பொய் இந்த
காதல் பொய் இல்லை
யாரடி யாரடி நான் இனி யாரடி
ஓர் துளி ஞாபகம் ஊறுதா பாரடி
யாரடா யாரடா நீ என்னுள் யாரடா
பேரலை போலே நீ பாய்கிறாய் பாரடா
மறந்தாயே மறந்தாயே
சிறுகுறிப்பு:
டெடி என்பது சக்தி சவுந்தர் ராஜன் எழுதி இயக்கும் ஒரு தமிழ் படம். இந்த டெடி படத்தில் ஆர்யா மற்றும் சயீஷா சைகல் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்திலும், இவர்களுடன் கருணாகரன், மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் அறிக