Lala Kadai Santhi Song Lyrics in Tamil

Lala Kadai Santhi Song Lyrics in Tamil from Saravanan Irukka Bayamaen Movie. Lala Kadai Santhi Song Lyrics has penned by Yugabharathi.

படத்தின் பெயர்சரவணன் இருக்க பயமேன்
வருடம்2017
பாடலின் பெயர்லாலா கட சாந்தி
இசையமைப்பாளர்டி. இமான்
பாடலாசிரியர்யுகபாரதி
பாடகர்கள்பென்னி டயல்,
சுனிதி சவுகான்
பாடல் வரிகள்:

பெண்: வெது வெதுப்பா இனிச்சிருக்கும்
வெடல பொண்ணு நானு
விருப்ப பட்டு நெறுங்கி வந்தா
விளக்கு அணைக்கும் மூனு
வாம்மா நீ சொன்னா தருவேனே தேனு
வட்டியோட அசல வாங்கு அதுதானே சீனு

ஆண்: லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி
லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி

ஆண்: பாத்தா பளபளக்குற
பாலா வழிய வெக்குற
கீத்தா கிழியவெக்குற
கிறுக்கேத்தி…

ஆண்: கேட்டா கதையளக்குற
கேப்பா என்ன வெடிக்கிற
தீட்டா ஒதுங்கி நிக்குற
உசுப்பேத்தி…

பெண்: லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி
லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி

பெண்: ஏன்டா எலி புடிக்கிற
ஈயா இலை விரிக்கிற
தூண்டி துருவா நிக்குற
சுதி ஏத்தி…

பெண்: வான்டா சுழல வைக்குற
வாகா வழி மறிக்குற
தாண்டி தவறு பன்னுற
அடி யாத்தி…

ஆண்: லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி

பெண்: லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி

ஆண்: ஆச வெறகடுப்புல
வேக விளைஞ்சி நிக்குற
ரோசா உன்ன நினைக்கையில்
நெடியேறும்…

பெண்: பாசி பயிறுக் கண்ணுல
பாதாம் பருப்பு செய்யுற
ராசா ஒன்ன நெருங்கையில்
ருசி மாறும்…

ஆண்: மத்தாக மனச நீ கடையாம
என்ன மாராப்பில் பதம்பாரு

பெண்: சத்தாக சகலமும் தரப்போறேன்
மெத்த சாப்பாட்டில் பசி ஆறு

ஆண்: உசுரே கேக்க உன்ன நான் தூக்க
வாரேன் மாமன் கூத்தடிக்க

பெண்: லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி

ஆண்: லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி

ஆண்: பாலும் கொதிச்சிருக்குது
பாயும் விரிச்சிருக்குது
ஆனா அது எதுக்குன்னு தெரியாதா

பெண்: காயும் கனிஞ்சிருக்குது
வாயும் நனஞ்சிருக்குது
ஆனா அது உனக்குன்னு புரியாதா

ஆண்: உன் கண்ணாடி வளவியும் ஒடையாம
உன்ன கட்டோட மடிப்பேனே

பெண்: என் கண்டாங்கி புடவையும் கசங்காம
தொட மல்லாந்துக்கிடப்பேனே

ஆண்: உடனே வாடி ஒழுங்கா தாடி
மூடி போட என்னாதடி

பெண்: லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி

ஆண்: லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *