Oru Naalaikkul Ethanai Kanavu Song Lyrics

Oru Naalaikkul Ethanai Kanavu Song Lyrics in Tamil from Yaaradi Nee Mohini Movie. Oru Naalaikkul Ethanai Song Lyrics penned by Na.Muthukumar.

படத்தின் பெயர்யாரடி நீ மோகினி
வருடம்2008
பாடலின் பெயர்ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
இசையமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்நா. முத்துக்குமார்
பாடகர்கள்கார்த்திக், ரீடா தியாகராஜன்
பாடல் வரிகள்:

ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஓ ஓ ஓ ஓ… ஓஹோ ஓ ஓ ஓ ஓ…

ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
ஓ ஓ ஓ ஓஹோ

பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
என்றாலும் கால்கள் மிதக்கும்

ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஓ ஓ ஓ ஓ… ஓஹோ ஓ ஓ ஓ ஓ…

ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறிப் போனேன்

ஆண்: யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கிப் போவேன்

பெண்: இது ஏதோ புரியா உணர்வு
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை ஒரு எரிமல
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்

ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஓ ஓ ஓ ஓ… ஓஹோ ஓ ஓ ஓ ஓ…

ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா கொஞ்சம் புரியுமா
கடலோர கவிதைகள் தானே

ஆண்: உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்

பெண்: தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அது வரையில் நடப்பது நடக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *