Kannoram or Sollatha Kadhal Ellam Kallaraiyil Song Lyrics in Tamil. Sollatha Kadhal Ellam Kallaraiyil Song Lyrics penned by T.Suriavelan.
Sollatha Kadhal Ellam Kallaraiyil Lyrics
ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
ஆண்: உன் கண்ணோரம்
கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம்
நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு
உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு
ஒன்றாகி தொலைந்தேன்
பெண்: உன் கண்ணோரம்
கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம்
நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு
உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு
ஒன்றாகி தொலைந்தேன்
ஆண்: நான் போகின்ற
வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற
காதலும் உனது அல்லவா
பெண்: உன் பிழை தாண்டி
நான் உன்னை நேசிக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா
ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
ஆண்: ஓ நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ
நீ இன்றி மண்ணில் வாழ
இன்றே சாவேனோ
பெண்: என் இதய சில்லில் கூட
அன்பே உந்தன் பெயர் தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும்
காதல் நீதானோ
ஆண்: உன் மூச்சுக் காற்றினை
நான் தொழுதிடவா
பெண்: என் காதல் யாவையும்
வாடகை விடவா
ஆண்: காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
பெண்: உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனே
ஆண்: நான் உனதில்லை என்றால் இறக்கவா
உயிரே உனதாய் நான் பிறக்கவா
பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில் தானோ
ஆண்: சொல்லாத காதல் எல்லாம்
கல்லறையில்லா சேரும்
நீ விட்டு போன தூரம்
எல்லாம் தீயாகும்
பெண்: உன்னாலே உள்ளுக்குள்ளே
கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு
என்னை கொல்லட்டும்
ஆண்: நீ நெஞ்சின் ஓரத்தில்
வலிக்கின்ற பாதியோ
உன் முதல் கவிதையில்
நான் இனி இல்லையோ
ஆண்: ஆயுளை மனதினை
அறிந்தவன் எவனோ
பெண்: நீ அறிவாய் என
தவித்து நின்றேனோ
நான் உனதில்லை என்றால் இறக்கவா
உயிரே உனதாய் நான் பிறக்கவா
ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
ஆண்: உன் கண்ணோரம்
கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம்
நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு
உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு
ஒன்றாகி தொலைந்தேன்
பெண்: நான் போகின்ற
வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா
ஆண்: உன் சிறைமீட்டு தினம்
உன்னை நான் காக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா
ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில் தானோ