Kai Valikuthu Kai Valikuthu Mama Song Lyrics in Tamil from Kunguma Chimil Movie. Kai Valikuthu Kai Valikuthu Mama Song Lyrics penned by Vaali
பாடல்: | கை வலிக்கிது மாமா |
---|---|
படம்: | குங்கும சிமிழ் |
வருடம்: | 1985 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | வாலி |
பாடகர்: | மலேசியா வாசுதேவன், S ஜானகி |
Kai Valikuthu Kai Valikuthu Mama Tamil Lyrics
பெண்: கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா
பெண்: நான் இழுத்தரைக்கிறபோது
கை பழுத்திருக்குது பாரு
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏன்யா
ஆண்: அம்மி அரைப்பது
பொம்பள வேல தான்டி
அடி அதுக்குப்போயி
என்னை அழைப்பது ஏன்டி
ஆண்: அம்மி இழுத்தரைக்கிறபோது
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏன்டி
பெண்: கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா
பெண்: நாந்தான் தனியா
என்னதான் பண்ணுறது
சோறு கொழம்பு
எப்ப தான் பொங்குறது
பெண்: மாடாட்டம் வேலை செய்ய
என்னால ஆவாது
மாமா நீ ஒத்துழைச்சா
எம்மேனி நோவாது
பெண்: ஆளாகி நான் சமஞ்சபுள்ள
ஆனாலும் நான் சமைச்சதில்லை
கண்ணாலம் கட்டாமலே
குடித்தனமா ஆயாச்சு
ஆண்: அம்மி அரைப்பது
ஏய் அம்மி அரைப்பது
பொம்பள வேலை தான்டி
அடி அதுக்குப்போயி
என்னை அழைப்பது ஏன்டி
பெண்: மாமா
ஆண் : அம்மி இழுத்தரைக்கிறபோது
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏன்டி
பெண்: கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா
ஆண்: அம்மா தாயே
முடிஞ்சா பாடுபடு
அலுப்பும் சலிப்பும்
இருந்தா ஆள விடு
பெண்: பொல்லாத கோவமென்ன
கண்ணான ராசாவே
வேணாண்ணு தள்ளி வச்சா
வாடாதோ ரோசாவே
ஆண்: மானே வா
பொய் கோவந்தான்டி
தேனே வா
ஒரு தாபந்தான்டி
கண்ணே நீ கஷ்டப்பட்டா
எம்மனசு தாங்காது
பெண்: கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஆண்: அட அம்மி அரைச்சிட
நானிருக்கிறேன் வாம்மா
இருவரும்: அட ஒன்னாகத்தான் நாமே
சேர்ந்து அம்மி அரைப்போமே
ஒண்ணாகத்தான் நாமே
சேர்ந்து அம்மி அரைப்போமே
பெண்: கை வலிக்கல
கை வலிக்கல மாமா
இப்ப கை வலிக்கல
கை வலிக்கல