Kadhal Theeve Song Lyrics in Tamil

Kadhal Theeve Song Lyrics in Tamil Font from Dharala Prabhu Movie. Kadhal Theeve Song Lyrics has penned in Tamil by Nixy.

பாடலின் பெயர்:காதல் தீவே
படத்தின் பெயர்:தாராள பிரபு
வருடம்:2020
இசையமைப்பாளர்:சீன் ரோல்டன்
பாடலாசிரியர்:நிக்ஸி
பாடகர்:சித் ஸ்ரீராம்
பாடல் வரிகள்:

குழு: என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழுவேன் உருமாறுவேன்

குழு: என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழுவேன் வாழுவேன்

ஆண்: காதல் தீவே நில்லாயோடி
காதல் செய்ய வந்தேனடி
கண்ணை பார்த்து கொல்லாதடி
மண்ணை பார்க்க மறந்தேனடி

ஆண்: இது ஒரு வித போராட்டம்
இதயத்தில் ஒரு புதுவித மாற்றம்
அணுக்களும் உன் பேர் சொல்லும்
மாயம் என்னடி

ஆண்: பனி கனவுகள் நாள் தோறும்
தனி இரவுகள் நடந்தால் போதும்
உயிருக்குள் தினம் ஆர்ப்பாட்டம்
நியாயம் என்னடி

குழு: தன்னந் தீவாய்
ஆண்: தீவாய்
குழு: போகாதடி
ஆண்: போகாதடி
குழு: தஞ்சம் கொள்ள வந்தேனடி

குழு: கொஞ்சம் வார்த்தை
ஆண்: வார்த்தை
குழு: மறந்தேனடி
ஆண்: மறந்தேனடி
குழு: கொஞ்சம் பேச்சில் விழுந்தேனடி
ஆண்: விழுந்தேனடி

ஆண்: சரிகமப நிச ரி க ரி
நி ப ம க ரி க ரி
சரிகமப நிச ரிக ரி
நி ப ம க ரி க ரி
ரி க ரி

ஆண்: பொய் உண்மை
ரெண்டும் சொல்ல தயக்கம் இல்லை
அடி நீ சிரித்தால்
அதில் மென்மையே உண்மையே

ஆண்: புல்வெளியில்
இரு துளிகளாக பிரிந்தோம்
இன்று காவிரியில்
நாம் ஓடினோம் கூடினோம்

ஆண்: ஊடல் ஏதும் இல்லாத
காதல் எங்கும் இல்லையடி
குறைகள் ஏதும் இல்லாத
எந்த உறவிலும் நிலை இல்லையடி

ஆண்: இது ஒரு வித போராட்டம்
இதயத்தில் ஒரு புதுவித மாற்றம்
அணுக்களும் உன் பேர் சொல்லும்
மாயம் என்னடி

ஆண்: பனி கனவுகள் நாள் தோறும்
தனி இரவுகள் நடந்தால் போதும்
உயிருக்குள் தினம் ஆர்ப்பாட்டம்
நியாயம் என்னடி

ஆண்: காதல் தீவே நில்லாயோடி
காதல் செய்ய வந்தேனடி
கண்ணை பார்த்து கொல்லாதடி
மண்ணை பார்க்க மறந்தேனடி

குழு: என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழுவேன் உருமாறுவேன்

குழு: என்னோடு வாழ்வாயோ
உயிரோடு சேர்வாயோ
உன் கைகள் சேர்ந்தால்
நான் வாழுவேன் வாழுவேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *