Enna Manamulla Ponnu Song Lyrics in Tamil

Enna Manamulla Ponnu Song Lyrics in Tamil from Chinna Pasanga Nanga Movie. Enna Manamulla Ponnu Song Lyrics has penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:சின்ன பசங்க நாங்க
வருடம்:1992
பாடலின் பெயர்: என்னை மானமுள்ள பொண்ணு
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்:S ஜானகி

Enna Manamulla Ponnu Lyrics in Tamil

பெண்: என்னை மானமுள்ள பொண்ணு
இன்னு மதுரையில கேட்டாக
குழு: மன்னார்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்தில கேட்டாக

பெண்: சீர் செனத்தையோட
வந்து சீமையில கேட்டாக
குழு: அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக
நம்ம சின்னமனூர்லயும் கேட்டாக

பெண்: அதை எல்லாம் உன்னால
வேணாமுன்னு சொன்னேன் தன்னால
என் மச்சான் உன் மேலே
ஆச பட்டு வந்தேன் முன்னால

பெண்: அதை எல்லாம் உன்னால
வேணாமுன்னு சொன்னேன் தன்னால
என் மச்சான் உன் மேலே
ஆச பட்டு வந்தேன் முன்னால

பெண்: என்னை மானமுள்ள பொண்ணு
இன்னு மதுரையில கேட்டாக
குழு: மன்னார்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்தில கேட்டாக

பெண்: கொண்ட முடி அழக பார்த்து
கோயம்பத்தூரிலே கேட்டாக
நெத்தியில பொட்ட பார்த்து
நெல்லூரில கேட்டாக

குழு: ரெண்டு புருவ அழக பார்த்தாக
ஒரு கோட்டையில் இவள கேட்டாக

பெண்: கண்ணழக பார்த்து பார்த்து
கண்டமனூரிலே கேட்டாக
மூக்கழக பார்த்து என்ன
மூக்கையன் கோட்டையில் கேட்டாக

பெண்: கோபமுள்ள பொண்ணுன்னு
என்ன கோம்பையில கேட்டாக
பாசமுள்ள பொண்ணுன்னு
என்ன பண்ணைபுரத்தில கேட்டாக

பெண்: இத்தனை பேரு சுத்தி வளைச்சும்
உத்தம ராசா உன்ன நினைக்கும்
பத்தினி உள்ளமையா

பெண்: என்னை மானமுள்ள பொண்ணு
இன்னு மதுரையில கேட்டாக
குழு: மன்னார்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்தில கேட்டாக

பெண்: அதை எல்லாம் உன்னால
வேணாமுன்னு சொன்னேன் தன்னால
என் மச்சான் உன் மேலே
ஆச பட்டு வந்தேன் முன்னால

பெண்: வேண்ட ஒரு சாமியுமில்ல
விரும்பி வந்தேன் உங்கள
உன்ன விட யாரும் இங்கே
உருப்படியா தோணல

குழு: நல்ல வாட்டமுள்ள ஆம்பள
உன்ன மறக்க இவளுக்காகல

பெண்: வாரி கட்டி தோளில் அணைச்சு
வெச்சுக்கங்க வேற கேக்கல
மாறி நீங்க போனீங்கன்னோ
மனசு இப்போ ஆறல

பெண்: தொட்டணைக்க கூடாதா
என்ன சூடி கொண்டா ஆகாதா
பட்டு துணி மேலாக்கு
அத தொட்டு இழுக்க கூடாதா

பெண்: உள்ளத எல்லாம் சொல்லி முடிச்சேன்
நல்ல முடிவு சொல்லுங்க மச்சான்
இன்னமும் சொல்லனுமா

பெண்: என்னை மானமுள்ள பொண்ணு
இன்னு மதுரையில கேட்டாக
குழு: மன்னார்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்தில கேட்டாக

பெண்: சீர் செனத்தையோட
வந்து சீமையில கேட்டாக
குழு: அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக
நம்ம சின்னமனூர்லயும் கேட்டாக

பெண்: அதை எல்லாம் உன்னால
வேணாமுன்னு சொன்னேன் தன்னால
என் மச்சான் உன் மேலே
ஆச பட்டு வந்தேன் முன்னால

பெண்: என்னை மானமுள்ள பொண்ணு
இன்னு மதுரையில கேட்டாக
குழு: மன்னார்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்தில கேட்டாக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *