Enga Vacha Enga Vacha Song Lyrics in Tamil

Enga Vacha Enga Vacha Song Lyrics in Tamil from Pattikattan Movie. Enga Vachan Enga Vachan Song Lyrics Music Composed by Ilaiyaraja.

படத்தின் பெயர்:பட்டிக்காட்டான்
வருடம்:1990
பாடலின் பெயர்:எங்க வச்சேன் எங்க வச்சேன்
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:
பாடகர்கள்:

பாடல் வரிகள்:

ஆண்: எங்க வச்சேன் எங்க வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
என் மனச காணலயே
யாரு கிட்ட கேட்போம்

பெண்: எங்கிட்டதான் வச்சிருக்கேன்
ஊசி போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு

ஆண்: எங்க வச்சேன் எங்க வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
என் மனச காணலயே
யாரு கிட்ட கேட்போம்

பெண்: எங்கிட்டதான் வச்சிருக்கேன்
ஊசி போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு

ஆண்: எங்க வச்சேன் எங்க வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
என் மனச காணலயே
யாரு கிட்ட கேட்போம்

பெண்: மூக்குத்திய மூக்குல வச்சேன்
மாமன் பேர நாக்குல வச்சேன்
ஆண்: வார்த்தைய நான் பேச்சில வச்சேன்
வஞ்சி உன்ன மூச்சுல வச்சேன்

பெண்: நீரும் வெட்டிவேரும்
ஒன்னு சேரும் நல்ல நேரம்

ஆண்: இப்பத்தான் ரெண்டு பேர்க்கும்
உச்சத்தில் வெப்பந்தான் ஏறி நிக்கும்
இப்பத்தான் ரெண்டு பேர்க்கும்
உச்சத்தில் வெப்பந்தான் ஏறி நிக்கும்

பெண்: எங்க வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
என் மனச காணலியே
யாரு கிட்ட கேட்போம்

ஆண்: எங்கிட்டதான் வச்சிருக்கேன்
ஊசி போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு

பெண்: எங்க வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
என் மனச காணலியே
யாரு கிட்ட கேட்போம்

ஆண்: ராக்குருவி ஜோடிய கொத்தும்
ரெக்க மூடி வெச்சிடும் முத்தம்
பெண்: கேட்குதைய்யா கூடுற சத்தம்
கன்னிப்பொண்ணு காதுல நித்தம்

ஆண்: கேட்டு என்ன லாபம்
இங்க காட்டு அந்த வேகம்

பெண்: சொன்னத ஏத்துகிட்டேன்
உன்ன நான் என்னுடன் சேர்த்துகிட்டேன்
சொன்னத ஏத்துகிட்டேன்
உன்ன நான் என்னுடன் சேர்த்துகிட்டேன்

ஆண்: எங்க வச்சேன் எங்க வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
என் மனச காணலயே
யாரு கிட்ட கேட்போம்

பெண்: எங்கிட்டதான் வச்சிருக்கேன்
ஊசி போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு

ஆண்: எங்க வச்சேன் எங்க வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
பெண்: என் மனச காணலியே
யாரு கிட்ட கேட்போம்