Manam Virumbuthe Unnai Song Lyrics

Manam Virumbuthe Unnai Song Lyrics from Nerukku Ner Movie. Manam Virumbuthe Unnai Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:நேருக்கு நேர்
வருடம்:1997
பாடலின் பெயர்:மனம் விரும்புதே உன்னை
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஹரிணி

பாடல் வரிகள்:

பெண்: மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும்
கண்ணும் சண்டை போடுதே

பெண்: நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

பெண்: மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே

பெண்: அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
குழு: வெட்டியது

பெண்: அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
குழு: ஒட்டியது

பெண்: புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்

பெண்: மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே

பெண்: நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

பெண்: ஆ மனம் விரும்புதே
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே

பெண்: மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
குழு: இருந்ததடா

பெண்: மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
குழு: பூத்ததடா

பெண்: சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே

பெண்: என் காதலா என் காதலா
நீ வா நீ வா என் காதலா

பெண்: நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

பெண்: மனம் விரும்புதே உன்னை உன்னை