Dosthu Bada Dosthu Song Lyrics

Dosthu Bada Dosthu Song Lyrics in Tamil from Saroja Movie. Dosthu Bada Dosthu Song Lyrics has written in Tamil by Kavignar Vaali.

படத்தின் பெயர்:சரோஜா
வருடம்:2008
பாடலின் பெயர்:தோஸ்த் படா தோஸ்த்
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:ஹரிச்சரண், நவீன்,
ராகுல் நம்பியார்

பாடல் வரிகள்:

தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து

நண்பா வானம் அப்பவும்
இப்பவும் எப்பவும் கிளீன் தான் ஆ ஆ
நாமெல்லாம் யார் ஒன்றுக்குள்
ஒன்றானால் ஒலிம்பிக் ரிங்தான் ஆ ஆ

ஓ ஓ குறையாது நம்ம சிநேகம்
ஓ ஓ குறையாது நம்ம வேகம்
ஓ ஓ குறையாது நம்ம ராகம்

தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து

கனவுகளை காணலாம்
காரியங்கள் கூடலாம்
கலாம் கலாம் அப்துல் கலாம்
சொன்ன வார்த்தைக்கோர் சலாம்

இளைய நதி புரண்டு வருகுது
இடையில் தடைகள் இருந்தால்
தகர்ப்போம்

ஓசோன் என்று வானில் கூட
ஓட்டை உண்டு நமது நட்பில்
நாளும் இங்கே ஓட்டை இல்லை
கோட்டை என்று

தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து

நமது விரல் பற்றியே
நடந்து வரும் வெற்றியே
தொடும் எதும் துலங்கிடும்
நம்ம ஜாதகமே தனி ஓ

வெளுத்து கட்டு நமது காட்டிலே
அடை மழை நினைத்தால்
நிலவை பிடிப்போம்

வாடை காத்து பாடும் பாட்டு
காதில் கேளு தூள் கிளப்பு
நேற்று இன்று நாளை நம்ம நாளு

தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து

நண்பா வானம் அப்பவும்
இப்பவும் எப்பவும் கிளீன் தான் ஆ ஆ
நாமெல்லாம் ஒன்றுக்குள்
ஒன்றானால் ஒலிம்பிக் ரிங்தான் ஆ ஆ

ஓ ஓ குறையாது நம்ம சிநேகம்
ஓ ஓ குறையாது நம்ம வேகம்
ஓ ஓ குறையாது நம்ம ராகம்

தோஸ்த் படா தோஸ்த்
தோஸ்த்துக்கு இல்லை வாஸ்து
சவுத்து முதல் நார்த்து
சொல்லி கொடி ஏத்து

சிறுகுறிப்பு:

சரோஜா என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை திரில்லர் படம். இதனை வெங்கட் பிரபு எழுதி இயக்க டி.சிவா தயாரித்துள்ளார். இதில் சிவா, வைபவ், பிரேம்ஜி, எஸ்.பி.சரண், வேகா தமோடியா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சம்பத் ராஜ், காஜல் அகர்வால், நிகிதா துக்ரால் மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தினை சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5, 2008 அன்று வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் அறிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *