Chinna Paiyan Chinna Ponna Kathalicha Song Lyrics

Chinna Paiyan Chinna Ponna Kathalicha Song Lyrics in Tamil from Deva Movie. Chinna Paiyan Chinna Ponna Kathalicha Song Lyrics penned by Vaali

படத்தின் பெயர்:தேவா
வருடம்:1995
பாடலின் பெயர்:சின்ன பையன்
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:SN சுரேந்தர், KS சித்ரா

பாடல் வரிகள்:

ஆண்: சின்ன பையன்
சின்னபொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்

ஆண்: கன்னி பொண்ணு
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்

பெண்: உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு
சின்னையா என்னையா
இன்னும் என்ன வேணும் சொல்லையா

பெண்: சின்ன பையன்
சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்

பெண்: கன்னி பையன்
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்

பெண்: எண்ணிரெண்டு வயதில்
உன் கண்ணிரெண்டில் விழுந்தேன்
ஆண்: முத்திருக்கும் கடலில்
நான் முக்குளிச்சு எழுந்தேன்

பெண்: வேலிகளை தாண்ட சொல்லும்
வாலிபத்தின் வேகம் தான்
ஆண்: வேறெதுக்கு பூத்ததிந்த
பேரழகு தேகம் தான்

பெண்: உன் முத்தமழையே
இங்கு நித்தம் குளிக்கும்
சின்ன சிற்பம் இந்த பட்டு கன்னம்
கட்டி வெள்ளம் அல்லவா

ஆண்: சின்ன பையன்
சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்

ஆண்: கன்னி பொண்ணு
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்

ஆண்: சின்ன சின்ன கவிதை
என் கை எழுத துடிக்கும்
பெண்: மெல்ல மெல்ல எழுது
என் மெல்லிடையும் தவிக்கும்

ஆண்: கன்னி மலர் கண்ணில் பட்டால்
கற்பனைகள் பாயாதா
பெண்: கற்பனைகள் பாயாவிட்டால்
கன்னி மலர் காயாதா

ஆண்: என் முல்லை வனமே
மின்னும் முத்து வடமே
உன்னை பக்கம் வந்து நிக்கும்
இன்ப சொர்க்கம் என்று சொல்லவா

பெண்: சின்ன பையன்
சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்

பெண்: கன்னி பையன்
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்

ஆண்: உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு
பெண்: சின்னையா என்னையா
இன்னும் என்ன வேணும் சொல்லையா

ஆண்: சின்ன பையன்
சின்ன பொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்

பெண்: ஒ கன்னி பையன்
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *