Onne Onnu Kanne Kannu Song Lyrics in Tamil from Theri Movie. Onne Onnu Kanne Kannu Chella Kutty Song Lyrics has penned in Tamil by Kabilan.
படத்தின் பெயர் | தெறி |
---|---|
வருடம் | 2016 |
பாடலின் பெயர் | ஒன்னே ஒன்னு |
இசையமைப்பாளர் | ஜி.வி. பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர் | கபிலன் |
பாடகர்கள் | விஜய், நீத்தி மோகன் |
பாடல் வரிகள்:
ஆண்: ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு செல்லா குட்டியே
என் காதல் துட்ட
சேத்துவச்ச கல்லாப்பெட்டியே
பெண்: தொட்டுப் ஃபார்க்க
கிட்டவந்த மிட்டாமிராசே
உன் விரலுபட்டா
வெடிக்கும் இந்த வெள்ளப்பட்டாசு
ஆண்: ஐ ஃபார் யூ யூ ஃபார் மீ
சேர்ந்தாக்கா சுனாமி
பெண்: யூ ஃபார் மீ ஐ ஃபார் யூ
சேர்ந்தாக்கா ஐ லவ் யூ
ஆண்: ஏய் துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடும் தேனு
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே
பெண்: கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசிவெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்
ஆண்: ஓரூரில் காதலில்லை என்றால்
அந்த வானம் இல்லை
இந்த பூமி இல்லை
ஆண்: நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால்
ஆண்கள் ஆண்கள் இல்லை
பெண்கள் பெண்கள் இல்லை
ஆண்: நீ என்னைப் பார்த்த அந்த நேரமே
என் காதல் மீண்டும் முன்னேறுமே
என் முன்னே வந்து நீ கேளடி
என் காதல் கனா நீயடி
பெண்: மலையாளப் பூவுக்கு மாரப்பு
நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு
ஆண்: அச்சாணிக் கண்ணால
மச்சான சாய்க்காத
உன்னப்போல் செவ்வாழை
உள்ளத்தில் காய்க்காத
பெண்: நீ ஆ காட்டி கிட்டவந்தா
முத்தச்சோறுதான் ஊட்டிவிடுவேன்
மூணு வேளைக்கு பேபி
ஆண்: ஏய் துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடும் தேனு
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே
பெண்: கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசிவெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்
பெண்: பண்ணாத நீ என்ன மக்காரு
பக்கத்திலே வந்து உட்காரு
ஆண்: ஒரு பூவில் பலவாசம்
உலகத்தில் இருக்காது
இருந்தாலும் அவை யாவும்
உன்னப்போல மணக்காது
பெண்: ஏய் மியாவ் மியாவ் மீசைக்காரா
புட்டிப்பாலுதான் ஊட்டிவிடுவா
பூனைக்குட்டிக்கு பேபி
பெண்: ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு செல்லா குட்டியே
ஆண்: என் காதல் துட்ட
சேத்துவச்ச கல்லாப்பெட்டியே
பெண்: ஓயே ஓயே ஓய்
தொட்டுப் ஃபார்க்க
கிட்டவந்த மிட்டாமிராசே
ஆண்: என் என் விரலுபட்டா
வெடிக்கும் இந்த
வெள்ளப்பட்டாசு
ஆண்: ஐ ஃபார் யூ யூ ஃபார் மீ
சேர்ந்தாக்கா சுனாமி
பெண்: யூ ஃபார் மீ ஐ ஃபார் யூ
சேர்ந்தாக்கா ஐ லவ் யூ
ஆண்: கண்ணு துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடும் தேனு
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே
பெண்: கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசிவெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்
குறிப்பு:
தேறி-ஆனது 2016-ம் ஆண்டு அட்லீயால் இயக்கி வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜய், சமந்தா ரூத் பிரபு மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இதற்கு ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்-ம் மற்றும் எடிட்டிங் ரூபனும் செய்துள்ளனர். இதன் அனைத்து பாடல் வரிகளையும் நா.முத்துக்குமார், பா.விஜய், கபிலன், ரோகேஷ், அருண்ராஜா காமராஜ் மற்றும் புதுமைப்பித்தன் ஆகியோர் இயற்றியுள்ளனர். மேலும் அறிய