Annathe Annathe Song Lyrics in Tamil from Annaatthe Movie. Annatha Annatha or Annaatthe Annaatthe Song Lyrics has penned in Tamil by Viveka.
படத்தின் பெயர்: | அண்ணாத்த |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | அண்ணாத்த அண்ணாத்த |
இசையமைப்பாளர்: | D இமான் |
பாடலாசிரியர்: | விவேகா |
பாடகர்கள்: | SP பாலசுப்ரமணியம் |
பாடல் வரிகள்
குழு: காந்தம் கணக்கா
கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா
அண்ணன் பாரு அன்னன் பாரு
குழு: ஊரு பூரா தாறு மாறா
விசிலு பறக்க
ஆற வாரத்தோட சத்தம்
தெறிக்க தெறிக்க
குழு: வீரத்துக்கு வேற பேரு
காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூட போறோம்
கூட சேந்து நில்லு
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையிலே உடையில
கொல கொல மாஸு
ஆண்: கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்லை
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
ஆண்: உறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது
வானையும் வளைக்கலாம்
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
குழு: தலைவா தலைவா
தலைவா தலைவா
பெண்கள்: கீழடிக்கு பக்கத்தூரு
வாரித்தரும் வைகையாறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
பெண்கள்: தாளடிக்கும் களத்துல
நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு
பெண்கள்: வேரில் வீரம் தாங்கி
ஓங்கி வாழும் அதிசய நிலமடா
மாரில் ஈட்டி வாங்கி போரில்
மோதும் மறத்தமிழ் இனமடா
பெண்கள்: பாசக்காரா நேசக்காரா
வேலைக்காரா மூளைக்காரா
மாயக்கார மச்சக்காரா
காவக்கார வாயா
ஆண்: காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு
ஆண்: உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுயதவறுணரும் செயலல்லவா
ஆண்: நெற்றியில வேர்வை வேணும்
நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்
ஆண்கள்: விறல் பத்து இருக்குது
விடியில எழுப்பிடு
ஆண்: எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
ஆண்கள்: கனவுகள் நடந்திடும்
அதுவரை வாழ்க்கையில்
ஆண்: நொடியும் நீ துஞ்சக்கூடாதே
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்கள்: அண்ணாத்த பேசுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த பாடுனா
குழு: ஸ்டைலு
ஆண்கள்: அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
குழு: தெருவெங்கும் வீசு
ஆண்: அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையிலே உடையில
குழு: கொல கொல மாஸு
ஆண்கள்: அண்ணாத்த மாஸுக்கே
பெண்கள்: மாஸு
ஆண்கள்: அண்ணாத்த வாக்கிங்கே
பெண்கள்: ரேசு
ஆண்கள்: அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசு தான்
ஆண்கள்: அண்ணாத்த மாஸுக்கே
பெண்கள்: மாஸு
ஆண்கள்: அண்ணாத்த வாக்கிங்கே
பெண்கள்: ரேசு
ஆண்கள்: அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசு தான்
” தாளடிக்கும் களத்துல
நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு” is not a correct lyrics.
தாளடிக்கும் களத்துல தவ்வி ஓடும் நெல்லை அள்ளி பசியாரும் பத்து ஊரு… ~இதான் சரி
Thank you for that correction