Adi Penne Oru Murai Nee Sirithal Song Lyrics

Adi Penne Oru Murai Nee Sirithal Song Lyrics in Tamil from Naam Album. Adi Penne Oru Murai Nee Sirithal Song Lyrics has penned by Suriavelan.

Adi Penne Oru Murai Nee Sirithal Lyrics

ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்

ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

ஆண்: ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே
வாசம் பிறந்ததோ

பெண்: வேர்வை துளிகளும்
தீர்த்தம் போல
என் மேலே படுகையில்
பாவம் அழியுதோ

ஆண்: இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே
பெண்: இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே

ஆண்: அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
பெண்: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

ஆண்: எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
பெண்: தேகம் தீண்டும் தோறும் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ

பெண்: மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
ஆண்: விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை

பெண்: அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
ஆண்: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

ஆண்: நீ இரவல் உயிரா உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி

ஆண்: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

பெண்: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா