Uyire Unnai Unnai Enthan Song Lyrics in Tamil

Uyire Unnai Unnai Enthan Song Lyrics in Tamil from Vinnaithaandi Varuvaayaa. Uyire Unnai Unnai Enthan Song Lyrics penned by Thamarai.

படத்தின் பெயர்:விண்ணைத்தாண்டி வருவாயா
வருடம்:2010
பாடலின் பெயர்:அன்பில் அவன்
இசையமைப்பாளர்:ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்:தாமரை
பாடகர்கள்:தேவன் ஏகாம்பரம், சின்மயீ

பாடல் வரிகள்:

குழு: அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என நினைத்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

பெண்: உயிரே
உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்

பெண்: இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

ஆண்: உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

குழு: நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ

குழு: ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

ஆண்: உயிரே
உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்

ஆண்: இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

பெண்: நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
எங்கு என்று அதை பயின்றோம்

ஆண்: பூமி வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு

குழு: நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ

குழு: ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

ஆண்: உயிரே
உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்

ஆண்: இனிமேல்
புயல் வெயில் மழை
மாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

பெண்: உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

குழு: நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ

குழு: ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

குழு: ஒ ஓ ஓ… ஒ ஓ ஓ…
ஒ ஓ ஓ… ஒ ஓ ஓ…
ஒ ஓ ஓ… ஒ ஓ ஓ…
ஒ ஓ ஓ… ஒ ஓ ஓ…

குழு: ஒ ஓ ஓ… ஒ ஓ ஓ…
ஒ ஓ ஓ… ஒ ஓ ஓ…
ஒ ஓ ஓ… ஒ ஓ ஓ…
ஒ ஓ ஓ… ஒ ஓ ஓ…

ஆண்: காதல் எல்லாம்
தொலையும் இடம் கல்யாணம் தானே
இன்று தொடங்கும்
இந்த காதல் முடிவில்லா வானே

1 thought on “Uyire Unnai Unnai Enthan Song Lyrics in Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *