Uppu Kallu Thanneerukku Song Lyrics in Tamil from Karuppusamy Kuthagaikarar Film. Uppu Kallu Thanneerukku Song Lyrics penned by Yugabharathi
பாடல்: | உப்பு கல்லு தண்ணீருக்கு |
---|---|
படம்: | கருப்பசாமி குத்தகைதாரர் |
வருடம்: | 2007 |
இசை: | தீனா |
வரிகள்: | யுகபாரதி |
பாடகர்: | பம்பாய் ஜெயஸ்ரீ |
Uppu Kallu Thanneerukku Lyrics
உப்பு கல்லு
தண்ணீருக்கு ஏக்கப் பட்டது
கண்ணு ரெண்டும்
கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு
புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பி செல்ல
கூடாதுன்னு கேட்டு கிட்டது
தேதி தாள போல வீணே
நாளும் கிழியறேன் நான்
தேர்வு தாள கண்ணீரால
ஏனோ எழுதறேன்
இது கனவா இல்லை நெஜமா
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லையே
உப்பு கல்லு
தண்ணீருக்கு ஏக்கப் பட்டது
கண்ணு ரெண்டும்
கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு
புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பி செல்ல
கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
ஏதும் இல்லை வண்ணம் என்று
நானும் வாடினேனே
ஏழு வண்ண வானவில்லாய்
என்னை மாற்றினாய்
தாயும் இல்லை என்று
உள்ளம் நேற்று ஏங்கினேனே
தேடி வந்து நெய்த
அன்பால் நெஞ்சை தாக்கினாய்
கத்தியின்றி ரத்தமின்றி
காயம்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால்
நன்மை அடைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி
சேதப்பட்டவள்
உன் நிழல் கொடுத்த தைரியத்தால்
உண்மை அறிகிறேன்
உப்பு கல்லு
தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
ஒத்தை சொல்லு
புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
மீசை வைத்த அன்னை போல
உன்னைக் காண்கிறேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம்
வேதம் ஆகுதே
பாழடைந்த வீடு போல
அன்று தோன்றினேன்
உன் பார்வை பட்ட காரணத்தால்
கோலம் மாறுதே
கட்டில் உண்டு மெத்தை உண்டு
ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்கவில்லை
எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு
ஆன போதிலும்
கண் நாளும் இங்கு தீண்டவில்லை
உனது நினைவிலே
உப்பு கல்லு
தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
கண்ணு ரெண்டும்
கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு
புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பி செல்ல
கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
தேதி தாள போல வீணே
நாளும் கிழியுறேன் நான்
தேர்வு தாள கண்ணீரால
ஏனோ எழுதறேன்
இது கனவா இல்லை நெஜமா
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லையே
உப்பு கல்லு
தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
கண்ணு ரெண்டும்
கண்ணீருக்கு வாக்கப்பட்டது