Un Paarvai Ennai Kolla Song Lyrics in Tamil

Un Paarvai Ennai Kolla Song Lyrics in Tamil from Naam Album Series. Un Paarvai Ennai Kolla Song Lyrics has penned in Tamil by Suriavelan.

ஆல்பம் பெயர்: நாம்
வருடம்:2020
பாடலின் பெயர்:என் அன்பே ஒரு முறை
இசையமைப்பாளர்:ஸ்டீபன் ஜிஷரியாக்
பாடலாசிரியர்:சூரியவேலன்
பாடகர்கள்:ஸ்ரீநிஷா ஜெயசீலன்

பாடல் வரிகள்:

என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்

உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

வேர்வை துளிகளும தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ

மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை

அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

1 thought on “Un Paarvai Ennai Kolla Song Lyrics in Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *