Sudithar Aninthu Song Lyrics from Poovellam Kettuppar Tamil Movie. Sudithar Aninthu Song Lyrics penned in Tamil by Pazhani Bharathi.
படத்தின் பெயர்: | பூவெல்லாம் கேட்டுப்பார் |
---|---|
வருடம்: | 1999 |
பாடலின் பெயர்: | சுடிதார் அணிந்து |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | பழனி பாரதி |
பாடகர்கள்: | ஹரிஹரன், சாதனா சர்கம் |
Sudithar Aninthu Lyrics in Tamil
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம்
நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா
விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே
உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ
போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம்
நீ சொல்வாயா
உன் பேரை சொன்னாலே
நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும்தான்
நான் விரும்பி கேட்கிறேன்
இருவர் ஒருவராய் இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில்
உன் காதல் மாறுமா
விடிகாலை தாமரை பூவிது
விண்மீனை பார்க்குமா
உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ
போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம்
நீ சொல்வாயா
பல கோடி பெண்களிலே
எதற்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்ச தோன்றுமா
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதல் இது
மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதல் இது
நெஞ்சை விட்டு போகுமோ
உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ
போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம்
நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா
விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே