Nenachapadi Nenachapadi Song Lyrics in Tamil

Nenachapadi Nenachapadi Song Lyrics in Tamil from Kadhalar Dhinam Movie. Nenachapadi Nenachapadi Song Lyrics has penned in Tamil by Vaali.

பாடல்:நெனச்சபடி நெனச்சபடி
படம்:காதலர் தினம்
வருடம்:1999
இசை:AR ரஹ்மான்
வரிகள்:வாலி
பாடகர்:ஸ்ரீனிவாஸ், MG ஸ்ரீகுமார்,
கங்கா சித்தராசு, காஞ்சனா

Nenachapadi Nenachapadi Lyrics in Tamil

பெண்கள்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ

குழு: நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாளோ
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாளோ

ஆண்: என் தோள்களே தோட்டம் என்று
என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வானம் நந்தவனம் ஆகும்

பெண்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு

ஆண்: உன் கணவன்
நாளை தான் வரவேண்டும்
உயிர்க் காதல்
நெஞ்சையே தரவேண்டும்

ஆண்: மணப்பந்தல் தோரணம்
நான் போட
மணவாளனோடு
உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான்
ஊஞ்சல் ஆட

ஆண்: காதலெனும் சொல்லை
நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம்
காதல் எந்தன் கையில் இல்லை

ஆண்: காதலெனும் சொல்லை
நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம்
காதல் எந்தன் கையில் இல்லை

ஆண்: வாழ்வு தந்த வள்ளல்
வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல
நானும் வந்தேன் கண்கள் ஈரமாக

ஆண்: என்றும் எனது கண்ணிலே
உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே
என் இன்பம்

ஆண்: என்றும் எனது கண்ணிலே
உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே
என் இன்பம்

ஆண்: இங்கு நீ சிரிக்க
நான் பார்த்தாலே
எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க நலமாக
நீ வாழ்க நலமாக

பெண்கள்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ

குழு: நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாளோ
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாளோ

ஆண்: அல்லி விழியோரம்
அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது
தாழை மலர் சூட்டி

ஆண்: அல்லி விழியோரம்
அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது
தாழை மலர் சூட்டி

ஆண்: ஆதி முதல் அந்தம்
ஆபரணம் பூட்டி
அன்னம் இவள் மேடை வந்தால்
மின்னல் முகம் காட்டி

ஆண்: கெட்டி மேளம் கொட்டிட
மணப்பெண்ணை
தொட்டுத் தாலி கட்டினான்
மாப்பிள்ளை

பெண்கள்: கெட்டி மேளம் கொட்டிட
மணப்பெண்ணை
தொட்டுத் தாலி கட்டினான்
மாப்பிள்ளை

ஆண்: இந்த ஏழை நெஞ்சமும்
நீ வாழ என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க நலமாக

பெண்கள்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ

குழு: நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாளோ
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாளோ

பெண்கள்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *