Naan Un Azhaginile Song Lyrics in Tamil from 24 Movie. Naan Un Azhaginile Song Lyrics has penned in Tamil Madhan Karky and Music by Rahman.
பாடல்: | நான் உன் அழகினிலே |
---|---|
படம்: | 24 |
வருடம்: | 2016 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | மதன் கார்க்கி |
பாடகர்: | அர்ஜித் சிங், சின்மயீ |
Naan Un Azhaginile Lyrics in Tamil
ஆண்: நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
ஆண்: உன் முகம் தாண்டி
மனம் சென்று
உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின்
நிறம் பார்த்ததால்
பெண்: நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
ஆண்: என்னில் இணைய
உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேனோ
பெண்: நெஞ்சம் இரண்டும்
கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில்
கால வெளியில்
கால்கள் பதித்து போவோம்
ஆண்: இதுவரை யாரும் கண்டதில்லை
நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததால்
பெண்: நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
ஆண்: வானம் கனவு பூமி கனவு
நீயும் நானும் நிஜம் தானே
பெண்: பொய்கள் கரையும்
உண்மை விரியும்
யாவும் மறைவதேனோ
எந்தன் இதழை நீயும் குடிக்க
அண்டம் கரைவதேனோ
ஆண்: உலகமே அகசிவப்பில் ஆனதே
உனது நாணம் சிந்தியே
உறவே அதிலே நான் வசிப்பதால்
பெண்: நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
ஆண்: உன் முகம் தாண்டி
மனம் சென்று
உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின்
நிறம் பார்த்ததால்
ஆண்: நான் உன் அழகினிலே
தெய்வம் உணர்கிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
ஆண்: உன் முகம் தாண்டி
மனம் சென்று
உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின்
நிறம் பார்த்ததால்
பெண்: நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்