Merku Seemaiyile Song Lyrics from Ettupatti Rasa Tamil Movie. Merku Seemaiyile Song Lyrics penned in Tamil by Kasthuri Raja.
படத்தின் பெயர்: | எட்டுப்பட்டி ராஜா |
---|---|
வருடம்: | 1997 |
பாடலின் பெயர்: | மேற்கு சீமையிலே |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | கஸ்தூரி ராஜா |
பாடகர்கள்: | தேவா, ஸ்வர்ணலதா |
பாடல் வரிகள்:
ஆண்: மேற்கு சீமையிலே
வேகாட்டு கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
ஆண்: காட்டு புலி ஒன்னு
காயம்பட்டு போச்சே
காரணம் யார் சொல்லம்மா
ஆண்: சாட்டை உடுக்கையில்
சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
ஆண்: சாட்டை உடுக்கையில்
சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே
ஆண்: மேற்கு சீமையிலே
வேகாட்டு கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
ஆண்: கொட்டு சத்தம் கொட்டு சத்தம்
கேட்கலையா சொல்லு தாயே
வெட்டருவா வேலு கம்பு
சூலாயுதம் ஏந்தி வாடி
பெண்: எட்டு திசை கட்டி
ஆண்டுவந்தானே
எத்தனையோ கஷ்டம்
தீர்த்து வச்சானே தாயே
ஆண்: அம்மா
பெண்: ஊரெல்லாம் உசுருன்னு
நேசம் வைச்சேனே
சனமெல்லாம் பெருசுனு
ஆசை பட்டானே தாயே
ஆண்: அம்மா
பெண்: மகமாயி தாயே நீ மனம் மாறனும்
மகராசன் கோட்டையில் குடி ஏறனும்
கருமாரி தாயே நீ கண் பார்க்கனும்
காயங்கள் மாறித்தான் மண்ணாலானும்
பெண்: குங்கும காரியே
குறை தீர்க்கும் தேவியே
உன் பிள்ளை வாடுதம்மா
முத்துமாரியே ஆத்தா தாயே
பெண்: காதல் வசப்பட்டு
பார்த்தது தப்பா
கழுத்தில் மாலை விழ
நினைச்சது தப்பா தாயே
ஆண்: அம்மா
பெண்: கல்யாணம் தான்
மாறி போனது தப்பா
காத்திருந்து நானும்
வாழ்ந்தது தப்பா தாயே
ஆண்: அம்மா
பெண்: சூறாவளி காத்து சுத்தி வந்து
சொந்தமெல்லாம் மாறி போனதம்மா
காத்திருந்து சொந்தம் வேணும்முன்னு
நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா
பெண்: பூவுக்கும் பொட்டுக்கும்
ஆசைப்பட்டு வந்தேன்
வேற என்ன கேட்டேனம்மா
முத்துமாரியே ஆத்தா தாயே
பெண்: மேற்கு சீமையிலே
வேகாட்டு கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
பெண்: மேற்கு சீமையிலே
வேகாட்டு கோவிலிலே
கதை ஒன்னு நடக்குதம்மா
பெண்: காட்டு புலி ஒன்னு
காயம்பட்டு போச்சே
காரணம் யார் சொல்லம்மா
பெண்: சாட்டை உடுக்கையில்
சத்தம் முழங்கிட
தாயே நீ பொங்கிடம்மா
சூலக்காளியே ஆத்தா தாயே
சூலக்காளியே ஆத்தா தாயே