Malini Sooliniye Song Lyrics in Tamil

Malini Sooliniye Song Lyrics from Pottu Amman Tamil Movie. Malini Sooliniye Song Lyrics has penned in Tamil by Piraisoodan.

படத்தின் பெயர்:பொட்டு அம்மன்
வருடம்:2000
பாடலின் பெயர்:ஒய்யார மயில் மேல்
இசையமைப்பாளர்:S.D.சந்தானகுமார்
பாடலாசிரியர்:
பாடகர்கள்:ஸ்வர்ணலதா

பாடல் வரிகள்:

ஆண்: மாளினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே

பெண்: பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா

குழு: பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா

பெண்: சக்தியம்மா
சகல யுக்தியம்மா
எங்கள் பக்தியம்மா
பார்த்து வாடியம்மா

பெண்: தாயே சக்தியம்மா
சகல யுக்தியம்மா
எங்கள் பக்தியம்மா
பார்த்து வாடியம்மா

குழு: பொங்கல் வைத்தோம்
பூஜை வைத்தோம் அம்மா நீ வா
எங்கள் பொட்டும் பூவும்
காக்க வேணும் தாயே

குழு: வேப்பிலையால்
மலை இட்டோம் சிங்காரி வா
எங்கள் வேதனையை
தீர்க்க வேண்டும் அம்மா

ஆண்: மாளினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே

பெண்: பெத்த பிள்ளை
உயிர் பழிபோகுமா
பேராற்றல் தீமைக்கு
தலை சாயுமா

குழு: மருளேஸ்வரி
அம்மா ஜெகதீஸ்வரி
வாகேஸ்வரி
தாயே பரமேஸ்வரி

பெண்: தாயே நீயும்
எம்மை கைவிட்டாலே
தணல் மீது பஞ்சாக
தாங்கத்தம்மா

குழு: யாகேஸ்வரி
அம்மா வாகேஸ்வரி
துர்கேஸ்வரி
தாயே அமுதேஸ்வரி

ஆண்: நம்பி நின்றோம்
உன்னை நாளும் அம்மா
நம்பிக்கை விளக்கேற்ற
வாராய் அம்மா

பெண்: பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா

ஆண்: மாளினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே

பெண்: அண்டம் பிண்டம்
உந்தன் ஆட்சி அம்மா
அருள் ஜோதி கிருணத்தில்
அணையாதமா

குழு: ராஜேஸ்வரி
தாயே மருளேஸ்வரி
பாலேஸ்வரி
அம்மா வாகேஸ்வரி

பெண்: சந்திரன் சூரியன்
விதி தானம்மா
அதர்மத்தின் இருள் வந்து
அதை மூடுமா

குழு: பாலேஸ்வரி
அம்மா காளிஸ்வரி
ஜோதீஸ்வரி
தாயே சொர்ணேஸ்வரி

ஆண்: பிள்ளைக்கு சக்தி நீ
தருவாய் அம்மா
உன் ஒரு பார்வை ஆயுதம்
ஆகும் அம்மா

இருவரும்: மாளினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே

ஆண்: பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா

ஆண்: பொட்டு அம்மா
எழுந்து வாடி அம்மா