Madura Veeran Song Lyrics in Tamil from Viruman Movie. Madhura or Madura Veeran Song Lyrics penned in Tamil by Raju Murugan. Viruman Songs.
பாடல்: | மதுரை வீரன் அழகுல |
---|---|
படம்: | விருமன் |
வருடம்: | 2022 |
இசை: | யுவன் சங்கர் ராஜா |
வரிகள்: | ராஜு முருகன் |
பாடகர்: | யுவன் சங்கர் ராஜா, அதிதி சங்கர் |
Madhura Veeran Lyrics in Tamil
பெண்: ஏ மதுரை வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிச்சே
ஆண்: வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே
பெண்: மாருல ஏறிட எடம் தா
மீசைய நிமிர வரட்டா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிக்கிட்டு வரப்போறேன் டா
உன் கூட வாரேன் டா
ஆண்: தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்னை தூக்கித்தான்
மொத்த தேனாத்தான்
நான் மோந்து ஊத்தவா
பெண்: சூர கண்ணு போடத்தான்
மாமன் உன்னை சூடித்தான்
தங்கம் நூறும் தான்
நான் பெத்து போடவா
ஆண்: கொடை சாய்ஞ்சேனே
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி ஒருவாட்டி
என்னை தூக்கிப்போயேன்டி
ஆண்: உன் கூட வாரேன் டி
உன் கூட வாரேன் டி
பெண்: மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை
குத்திக் கொல்லாதே
ஆண்: ஆந்தை முழிக்காரியே
அறுவாமனை மாறியே
சொகமா என்னை
வெட்டித் தள்ளாதே
ஆண்: சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான்
உன்னை நெஞ்சில் தங்குவேன்
பெண்: மாமன் நெஞ்சு மேலத்தான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
செத்தும் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்
ஆண்: வெளிப்பேச்சியே
என்னை சாட்சியே
என்னை மாத்தி
புதுசாக்கி உசுராக்கி
உன் கையில் தாரேன் டி
ஆண்: உன் கூட வாரேன் டி
நான் கூட வாரேன் டி
உன் கூட வாரேன் டி
நான் கூட வாரேன் டி