Kochikitu Nee Nadanthu Song Lyrics in Tamil from Otha Seruppu Movie. Kochikitu Nee Nadanthu Song Lyrics has penned in Tamil by Vivek.
படத்தின் பெயர்: | ஒத்த செருப்பு |
---|---|
வருடம்: | 2019 |
பாடலின் பெயர்: | கோச்சுக்கிட்டு நீ நடந்து |
இசையமைப்பாளர்: | சந்தோஷ் நாராயணன் |
பாடலாசிரியர்: | விவேக் |
பாடகர்கள்: | சித் ஸ்ரீராம், சங்கீதா கருப்பையா |
பாடல் வரிகள்:
ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள
மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாரு மேல
கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
உறுத்துதா புள்ள
காத்தடிச்சா பயப்படுவ
மான் வலையில் அகப்படுவ
பொத்தி வச்சி பாத்துக்கிட்டன்
புரிஞ்சிதா புள்ள
வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன்
காதுமடல் கடிச்சிருக்கேன்
உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன்
அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள
திரும்பி வா புள்ள
வெக்கத்துல ரவிக்கை தச்சு
முத்தத்துல ஜிமிக்கி வச்சா
போதாதோ பூங்கோதையே
சந்திரன தோலுருச்சி
ஒத்த பக்கம் தோடு வச்சா
போதாதோ பூங்கோதையே
பகல பாக்காத கூந்தல்
நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய்
இரவ பாக்காத தேகம்
தங்க துகளென மின்னல் விடுதேய்
பூ போட வேர்வை
மகரந்தம் மழையச்சோ
கோச்சுக்கிட்டு நீ நடந்து
மோச்சிகிட்டு நான் கெடந்து
நாளாச்சு தேம்பாவணி
உன்ன கொஞ்சம் பேசவிட்டு
தேன் திரட்டி சேத்து வச்சு
நாள் ஆச்சு தேம்பாவணி
கழுத்து கொட்டோரம் ஏறி
அழகுல வந்து விழு நீ
கவித மார்போடு மோதி
பாத்து வளைவுல பித்து பிடி நீ
நான் பாத வானம்
சதுரடியா வெல போச்சே
ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள
மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாரு மேல
கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
உறுத்துதா புள்ள