Karuva Karuva Payale Song Lyrics in Tamil from Karuppan Movie. Karuva Karuva Payale Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
படத்தின் பெயர் | கருப்பன் |
---|---|
வருடம் | 2017 |
பாடலின் பெயர் | கருவா கருவா பயலே |
இசையமைப்பாளர் | டி.இமான் |
பாடலாசிரியர் | யுகபாரதி |
பாடகர்கள் | சங்கர் மகாதேவன், சாஷா திருப்பதி |
பாடல் வரிகள்:
பெண்: கருவா கருவா பயலே என கேட்காம
தொட வாயா சூட்ட ஏத்தாம
ஆண்: வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம
பெண்: என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா
ஆண்: இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா
பெண்: நெருப்பா… என ஆக்குறியே செவப்பா
பெண்: கருவா கருவா பயலே என கேட்காம
தொட வாயா சூட்ட ஏத்தாம
ஆண்: வெளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட
விரட்ட நெனெச்சா பாயும் உன்மேல
பெண்: கொதிக்கும் சூட்ட நெதைக்கும் ஆத்த
துணிஞ்சி வருவேன் ஆட்டாத வால
ஆண்: விஷ காத்தா மோதாத மூச்சோட
பெண்: வெறி ஏற வாரேனே கூத்தாட
ஆண்: வெட கோழி ருசி ஏத்தி
விருந்து போடேண்டி நா சாப்பிட
பெண்: கருவா கருவா பயலே என கேட்காம
தொட வாயா சூட்ட ஏத்தாம
பெண்: அடுக்கு பாண முறுக்கு போல
எனையும் நொறுக்க நேரம் பாக்காத
ஆண்: அலுப்பு தீர அணைக்க போறேன்
ஒடம்பு வலிச்சா ஊர கூட்டாத
பெண்: கருப்பா வா பேசாத வாய்யால
ஆண்: அடி போடி பாப்பேண்டீ ஊடால
பெண்: பொலிகாளை உனைநானே
அடக்க போறேனே மாராப்புல
பெண்: கருவா கருவா பயலே என கேட்காம
தொட வாயா சூட்ட ஏத்தாம
ஆண்: ஓ வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம
பெண்: என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா
ஆண்: இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா
பெண்: நெருப்பா… என ஆக்குறியே செவப்பா