Karpagavalli Nin Song Lyrics in Tamil for Navarathiri. Karpagavalli Nin Song Lyrics has penned in Tamil by Inuvil Veeramani.
பாடல் வரிகள்
கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
பற்பலரும் போற்றும்
பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர்
சிங்காரக் கோயில் கொண்ட
கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
நீ இந்த வேளைதன்னில்
சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில்
நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா
ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே
ஆதரித்தாளும் அம்மா
கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
எல்லோர்க்கும் இன்பங்கள்
எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே
நித்ய கல்யாணியே
கபாலி காதல் புரியும்
அந்த உல்லாசியே உமா
உனை நம்பினேன் அம்மா
கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
நாகேஸ்வரி நீயே
நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே
வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே
இந்த லோகேஸ்வரி நீயே
உலகினில் துணையம்மா
கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா
அஞ்சன மை இடும்
அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும்
வஞ்சியே உன்னிடம்
தஞ்சம் என அடைந்தேன்
தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய்
கெஞ்சுகிறேன் அம்மா
கற்பக வல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா