Kalli Kaatil Pirantha Thaye Song Lyrics in Tamil

Kalli Kaatil Pirantha Thaye Song Lyrics in Tamil from Thenmerku Paruvakatru. Kalli Kaatil Pirantha Thaye Song Lyrics penned by Vairamuthu.


படத்தின் பெயர்:
தென்மேற்கு பருவக்காற்று
வருடம்:2010
பாடலின் பெயர்:கள்ளி காட்டில் பிறந்த தாயே
இசையமைப்பாளர்:N.R.ரகுநந்தன்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:விஜய் பிரகாஷ்

பாடல் வரிகள்:

கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்கவிடல நீயே

காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்கதான் இடமுண்டா

கரட்டு மேட்டயே மாத்துன
அவ கள்ளபுழிஞ்சி கஞ்சி ஊத்துன
கரட்டு மேட்டயே மாத்துன
அவ கள்ளபுழிஞ்சி கஞ்சி ஊத்துன

கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்கவிடல நீயே

உளவு காட்டுல வித வெதப்பா
ஓணான் கரட்டுல கூழ் குடிப்பா
அவாரன் குழையில கை துடைப்பா
பாவமப்பா ஓ ஹோ

வேலி முள்ளில் அவ விறகெடுப்பா
நாழி அரிசி வச்சு உலையரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசுர் வளர்ப்பா
தியாகமப்பா

கிழக்கு விடியும் முன்ன முளிக்குறா
அவ உலக்க பிடிச்சுதான் திறக்குறா
மண்ண கிண்டிதான் பொழைக்கிறா
உடல் மக்கிப்போக மட்டும் உழைக்குறா

கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்கவிடல நீயே

தங்கம் தனி தங்கம் மாசு இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில்ல
நேசமில்ல ஓ ஹோ

தாயீ கையில் என்ன மந்திரமா
கேப்பைக் களியிலும் நெய் ஒழுகும்
கஞ்சா கருவாடும் தேன் ஒழுகும்
அவ சமைக்கையிலே

சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது
அட தாயி ரெண்டு தாயி இருக்குதா

கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்கவிடல நீயே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *