Enna Azhagu Ethanai Azhagu Song Lyrics

Enna Azhagu Ethanai Azhagu Song Lyrics from Love Today Tamil Movie. Enna Azhagu Ethanai Azhagu Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:லவ் டுடே
வருடம்:1996
பாடலின் பெயர்:என்ன அழகு எத்தனை அழகு
இசையமைப்பாளர்:சிவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம்

பாடல் வரிகள்:

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில்
அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில்
சுகம் வைத்தாள்

நான் காதலின்
கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று
கொடுத்தாய் எழுந்து விட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

அன்பே உன் ஒற்றை பார்வை
அதை தானே யாசிதேன்
கிடையாதேன்றால் கிளியே
என் உயிர் போக யோசித்தேன்

நான்காண்டு தூக்கம் கெட்டு
இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலமும்
அடி தீ கூட தித்திதேன்

மாணிக்க தேரே உன்னை
மலர் கொண்டு பூசிதேன்
என்னை நான் கில்லி இது
நிஜம் தான சோதித்தேன்

இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

நான் கொண்ட ஆசை எல்லாம்
நான்காண்டு ஆசைதான்
உறங்கும் போதும் ஒலிக்கும்
அடி உன் கொலுசின் ஓசைதான்

நீ வீசும் பார்வை இல்லை
நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை மொழிய
அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்

இன்றே தான் பெண்ணே
உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம்
என் முதல் மோட்சம் நான் கொண்டேன்

மகராணியே மலர் வாணியே
இனி என் ஆவி உன் ஆவியே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில்
அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில்
சுகம் வைத்தாள்

நான் காதலின்
கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று
கொடுத்தாய் எழுந்து விட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே