Appa Un Anbukku Song Lyrics in Tamil from Jayamoorthy’s Album. Appa Un Anbukku Song Lyrics Written in Tamil by Ilayakamban.
Appa Un Anbukku Song Lyrics
அப்பா உன் அன்புக்கு
ஈடாகுமா ஆகாசம்
அப்பா உன் தியாகத்த
மிஞ்சிடுமா தாய்ப்பாசம்
ஓடும் ரத்தம் நாடி
நரம்பெல்லாம் உன் வாசம்
உன் வேர்வை துளிதான் பா
நான் படிக்கும் இதிகாசம்
உன்ன போல பூமியில
உன்னைவிட சாமி இல்லை
சொல்ல வார்த்தை ஏதுமில்லை
உன் சொல்லவிட வேதமில்லை
கண்டிக்கும் உன்னோட
பாசத்துக்கு முன்னே
கடவுளும் கூட நேகரில்லை
அப்பா உன் அன்புக்கு
ஈடாகுமா ஆகாசம்
அப்பா உன் தியாகத்த
மிஞ்சிடுமா தாய்ப்பாசம்
வறுமைய சொன்னதில்லை
நீ வாடி மனம் நின்னதில்லை
எதையுமே தனக்குனு நீ
இதுவரை எண்ணவில்லை
சொத்து சொகம் வந்ததில்லை
ஒரு சொந்தம் அள்ளி தந்ததில்லை
எத்தனையோ துன்பத்திலும் நீ
யாரிடமும் நின்னதில்லை
ஓலைச்சு ஓலைச்சு ஓடான
நான் எழுத படிக்க நீ ஏடான
நேர்மை வழிப்போகும் சேறான
நான் நெலைச்சு நிக்க நீ வேரான
அள்ளும் பகலும்
துயர கடலில் நீராடி
என்னை ஆலமரமா
ஆளாக்குன போராடி
அள்ளும் பகலும்
துயர கடலில் நீராடி
என்னை ஆலமரமா
ஆளாக்குன போராடி
அப்பா…
அப்பா உன் அன்புக்கு
ஈடாகுமா ஆகாசம்
அப்பா உன் தியாகத்த
மிஞ்சிடுமா தாய்ப்பாசம்
ஓடும் ரத்தம் நாடி
நரம்பெல்லாம் உன் வாசம்
உன் வேர்வை துளிதான் பா
நான் படிக்கும் இதிகாசம்
அப்பா நீ மந்திரமா
பாடுபட்ட எந்திரமா
நம்பிக்கையா நீ இருந்த
நான் வளர்த்தேன் கோபுரமா
ஓயாத சக்கரமா
கண் இமைபோல் பத்திரமா
என்னை பாதுகாத்த நீ வளத்த
பாங்க நான் சொல்லனுமா
தோளில் சாய்ச்சு என்னை ஆரட்டி
தொவண்டு விழும்போது சீராட்டி
பாச மழை தூவி பாராட்டி
பக்க துணை நின்னு வழிகாட்டி
என்னை வளர்த்த
உன் பாசம்தான் மாறாது
ஏழு ஜென்மத்திலும்
நான் பட்ட கடன்தான் தீராது
என்னை வளர்த்த
உன் பாசம்தான் மாறாது
ஏழு ஜென்மத்திலும்
நான் பட்ட கடன்தான் தீராது
அப்பா…
அப்பா உன் அன்புக்கு
ஈடாகுமா ஆகாசம்
அப்பா உன் தியாகத்த
மிஞ்சிடுமா தாய்ப்பாசம்
ஓடும் ரத்தம் நாடி
நரம்பெல்லாம் உன் வாசம்
உன் வேர்வை துளிதான் பா
நான் படிக்கும் இதிகாசம்
பூமி போல உன் பொறுமை
தீராதய்யா உன் பெருமை
என்னைக்குத்தான் மாறிடுமோ
இன்னல் படும் உன் நிலைமை
காலத்துக்கும் உன் கடமை
ஓயலையே என்ன கொடுமை
என் கண்ணீர் துளி பாடுதய்யா
பெத்தவனே உன் அருமை
எதையும் எதிர் பார்க்க்கா தியாகம் நீ
எந்தன் வேர் தேடும் மேகம் நீ
மூச்சுல கலந்தாடும் சொந்தம் நீ
முடிவே இல்லாத பந்தம் நீ
நீ இல்லாம
நான் ஆகிருப்பேன் சேதாரம்
அட நீதான் பா
என் வாழ்க்கையோட ஆதாரம்
நீ இல்லாம
நான் ஆகிருப்பேன் சேதாரம்
அட நீதான் பா
என் வாழ்க்கையோட ஆதாரம்
அப்பா…
அப்பா உன் அன்புக்கு
ஈடாகுமா ஆகாசம்
அப்பா உன் தியாகத்த
மிஞ்சிடுமா தாய்ப்பாசம்
ஓடும் ரத்தம் நாடி
நரம்பெல்லாம் உன் வாசம்
உன் வேர்வை துளிதான் பா
நான் படிக்கும் இதிகாசம்
