Amma Amma Song Lyrics in Tamil

Amma Amma Song Lyrics in Tamil from Velai Illa Pattadhaari Movie. Amma Amma Nee Enga Amma Song Lyrics was written in Tamil by Dhanush.

படத்தின் பெயர்வேலையில்லா பட்டதாரி
வருடம்2014
பாடலின் பெயர்அம்மா அம்மா
இசையமைப்பாளர்அனிரூத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்தனுஷ்
பாடகர்கள்தனுஷ், ஜானகி
பாடல் வரிகள்:

ஆண்: அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

ஆண்: தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே

ஆண்: இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ
உன் கண்கள் திறந்தாலே போதும்

ஆண்: அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

ஆண்: நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்

ஆண்: கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்

ஆண்: ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்

ஆண்: பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கும் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே

ஆண்: ஓ அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

பெண்: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

பெண்: நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை

பெண்: ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

ஆண்: அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

பெண்: எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்

ஆண்: தாயே உயிர் பிரிந்தாயே
பெண்: கண்ணே நீயும் என் உயிர் தானே

ஆண்: இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
பெண்: நான் பாடும் தாலாட்டு நீ தூங்க
காதோரம் என்றென்றும் கேக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *