Adada Song Lyrics in Tamil from Aayiram Jenmangal Movie. Adada Song Lyrics has written in Tamil by Yugabharathi and Music by C Sathya.
படத்தின் பெயர்: | ஆயிரம் ஜென்மங்கள் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | அடடா |
இசையமைப்பாளர்: | C.சத்யா |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்: | விஜய்நரைன் |
பாடல் வரிகள்:
அடடா அடடா
அவளே என் ஆளு
அழகோ அழகு
முழுசா நீ கேளு
சுத்தவிடும்… கண்ணால…
என் உச்சந் தலையில
அம்மி அரைச்சவ
முட்டின முட்டுல
முட்டியும் பேந்தேனே
நான் ரெக்க விரிச்சிட
நின்னு சிரிச்சவ
தட்டின தட்டுல
சல்லடையானேனே
தன்னாலே… கொன்னாலே…
ஜின்னு அடிக்கவில்லை
ரம்மு குடிக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனுசு கெறங்கி போனேன்
முத்தம் குடுக்கவில்லை
குத்தம் நடக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனச கொரங்கு ஆனேன்
என் மின்னல கொட்டுற
கண்ணுல புள்ளி வெச்சி
என்ன வளச்சி நெளுச்சி
வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம்
மத்தாளம் தட்டுற மன்மத
சங்கதி மொத்தமும் சொல்லவச்சி
அந்த மொரட்டு சிறுக்கி
ஒத்த நொடியில எடுத்தா ஏலம்
அடடா அடடா
அவளே என் ஆளு
அழகோ அழகு
முழுசா நீ கேளு
ஹேய் கால் அழக கண்டுவிட
கொஞ்சம் குனிஞ்சேனே
கை அழக தட்டிவிட
கன்னி கழிஞ்சேனே
வாய் அழக வட்டமிட
கண்ணு முழிச்சேனே
மார் அழகு மத்தியிலே
செத்து பொழைச்சேனே
கொஞ்சம் அவ சிரிச்சா
கொழுப்பே ஏறும்
தொட்டுவிட துணிஞ்சா
பசி தீரும்
ஒட்டி அவ நடந்தா
உலகே சேதம்
வெக்கத்துல கரைஞ்ச
ரசவாதம்
கொலைகாரி நெஞ்சே
மல பம்பா வந்து கொத்திவிட
வழி ஏதும் இல்லை
இருந்தாலும் என்னை கத்த விட்டாயே
ஜின்னு அடிக்கவில்லை
ரம்மு குடிக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனசு கெறங்கி போனேன்
முத்தம் குடுக்கவில்லை
குத்தம் நடக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனுச கொரங்கு ஆனேன்
என் மின்னல கொட்டுற
கண்ணுல புள்ளி வெச்சி
என்ன வளச்சி நெளுச்சி
வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம்
மத்தாளம் தட்டுற மன்மத
சங்கதி மொத்தமும் சொல்லவச்சி
அந்த மொரட்டு சிறுக்கி
ஒத்த நொடியில எடுத்தா ஏலம்
அடடா அடடா
அவளே என் ஆளு
அழகோ அழகு
முழுசா நீ கேளு