Yaaru Iva Song Lyrics in Tamil

Yaaru Iva Song Lyrics in Tamil from Adra Machan Visilu. Un Manaiviya Na Varuvana or Yaaru Iva Song Lyrics penned in Tamil by Thiraivannan.

பாடல்:யாரு இவ அடடா யாரு இவ
படம்:அட்ரா மச்சான் விசிலு
வருடம்:2016
இசை:NR ரகுநந்தன்
வரிகள்:திரைவண்ணன்
பாடகர்:GV பிரகாஷ் குமார்,
நமிதா பாபு

Yaaru Iva or Un Manaiviya Na Varuvana Lyrics

ஆண்: யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ
அவ வானவில்லை வளஞ்சு நெளிஞ்சு
வசியம் பண்ணி போறா
அவ ஊரு பேரு சொல்லாமலே
உசுர வாங்கி போறா

ஆண்: அவ கண்ணுக்குள்ள காந்தம் வச்சு
என்ன இழுத்து போறா
இவ திருவாரூர் தேரா
இவ தண்ணியில்லா மீனா போல
தவிக்க விட்டு போறா
என்ன தவிக்க விட்டு போறா

பெண்: உன் மனைவியா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்ன நான் விடுவேனா

பெண்: சாத்தியமா சொல்லுறேன்
தாளி ஒன்னு கட்டுடா
தடுக்க யாரு வந்தாலும்
தாருமாற வெட்டுடா

ஆண்: யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ

ஆண்: நிலவொன்று தரையில் வந்து
நடக்குது எதிரில் நின்று
எனக்குன்னு பொறந்தவதான்
என்று நானும் சொன்னேன்டி

பெண்: திட்டி திட்டி பேசினாலும்
தேனாக இன்னிக்குதடா
குட்டி போட்ட பூனையப்போல்
சுத்தி சுத்தி வந்தேன்டா

ஆண்: ஊரே எதுத்தாலும்
என்னக்கு நீ வேணும்
உசுரே போனாலும் நீ வேணும்டி
உலகே அழிஞ்சாலும்
நிலவே இருண்டாலும்
நாம ஒன்னாக வாழ்வோமாம்டி

பெண்: உன் மனைவியா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்ன நான் விடுவேனா

பெண்: சாத்தியமா சொல்லுறேன்
தாளி ஒன்னு கட்டுடா
தடுக்க யாரு வந்தாலும்
தாருமாற வெட்டுடா

ஆண்: யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ

பெண்: வாட்ஸாப்பில் நீ வந்தா
பெண்களுக்கு கொண்டாட்டம்
வாராத வந்திடாதே
வலைதளமே ஸ்தம்பிக்கும்

ஆண்: வள்ளுவனும் இருந்திருந்தா
வாசுகியை மறந்து விட்டு
உன்னையே புகழ்ந்து கொண்டு
இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருப்பான்

பெண்: வாகா எல்லைக்குள்
படவா நான் போன
இந்த நாட்டுக்கு புகழே இல்ல
சாகா வரம் வேண்டும்
சாமி தர வேண்டும்
மீண்டும் ஒரு ஜென்மம் தேவை இல்ல

ஆண்: உன் கணவனா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்ன நான் விடுவேனா

ஆண்: சாத்தியமா சொல்லுறேன்
தாளி வாங்கி கட்டுவேன்
தடுக்க யாரும் வந்தாலும்
தாருமாற வெட்டுவேன்

பெண்: யாரு இவன் அடடா யாரு இவன்
யாரு இவன் அடடா யாரு இவன்
நான் பள்ளிக்கூடம் படிக்கையில
ஒரு பார்வை பார்த்தான்
நான் பருவம் அடைந்தபோது என்ன
படி தாண்ட வச்சான்

ஆண்: இவ கண்ணுக்குள்ள காந்தம் வச்சு
என்ன இழுத்து போறா
இவ திருவாரூர் தேரா
இவ தண்ணியில்லா மீனா போல
தவிக்க விட்டு போறா
என்ன தவிக்க விட்டு போறா

பெண்: உன் மனைவியா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்ன நான் விடுவேனா

இருவரும்: சாத்தியமா சொல்லுறோம்
தாளி நாம்ம கட்டுவோம்
தடுக்க யாரு வந்தாலும்
தாருமாற வெட்டுவோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *